இவர் எப்படி பட்ட வீரர் ; இவரை அணியில் இருந்து வெளியேற்ற முடியாது ; வாய்ப்பு கொடுக்க வேண்டும் ; தினேஷ் கார்த்திக் ஓபன் டாக் :

இந்திய மற்றும் பங்களாதேஷ அணிகளுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளும், இரு டெஸ்ட் போட்டிகளும் நடைபெற உள்ளது. அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக முதல் ஒருநாள் போட்டியில் குறைவான ரன்களை இந்திய கிரிக்கெட் அணி எடுத்திருந்தாலும், பவுலிங் சிறப்பாக செய்து பங்களாதேஷ் அணியின் விக்கெட்டை தொடர்ச்சியாக கைப்பற்றி சிறப்பாக விளையாடி வந்தனர். ஆனால் இறுதியாக பங்களாதேஷ் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் அணியை வீழ்த்திய நிலையில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது பங்களாதேஷ் அணி.

இனிவரும் இரு போட்டிகளும் இந்திய அணி வென்றால் மட்டுமே ஒருநாள் போட்டிக்கான தொடரை கைப்பற்ற வாய்ப்புகள் இருக்கும். அதுமட்டுமின்றி, சமீபத்தில் நடைபெற்ற நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான தொடரில் மோசமான நிலையில் தோல்வியை பெற்றுள்ளது இந்திய.

ரிஷாப் பண்ட் -ன் பங்களிப்பு :

ஐபிஎல் 2022 தொடரில் சிறப்பாக விளையாடிய தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் இடம்பெற்றார். அதனால் ரிஷாப் பண்ட் -க்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது. இருப்பினும் உலகக்கோப்பை இறுதியாக இரு போட்டிகளும், நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடரில் துணை கேப்டனாகவும் விளையாடினார் ரிஷாப் பண்ட். ஆனால் பங்களிப்பு பெரிய அளவில் இந்திய அணிக்கு உதவியாக இல்லை. குறிப்பாக டி-20 போட்டியில்,

அதனால் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் இந்திய அணியில் இடம்பெற வேண்டும், ரிஷாப் பண்ட் -க்கு அதிக வாய்ப்பு கொடுக்கப்பட்டுவிட்டது என்று பலர் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் / பேட்ஸ்மேனாக கே.எல்.ராகுல் அணியில் இடம்பெற்று வருகிறார்.

இதற்கு ஆதரவாக பேசிய தினேஷ் கார்த்திக் கூறுகையில் : “நம்ம ஒட்டுமொத்தமாக பார்ப்பதை விட, தனி தனி போட்டியாக பார்க்க வேண்டும். ரிஷாப் பண்ட் இறுதியாக விளையாடிய 10 ஒருநாள் போட்டிக்கான தொடரில் ஆவெரேஜ்-ஆக 45 ரன்களை வைத்துள்ளார். அதுமட்டுமின்றி, இங்கிலாந்து மிகு எதிரான போட்டியில் 120 ரன்களை அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக விளையாடியுள்ளார். அதனால் அவர் சிறப்பாக தான் விளையாடி வருகிறார்.”

“ஒருவர் தனக்கேன நன்றாக விளையாடி கொண்டு இருக்கும்போது. நீங்கள் அவரைப் பார்த்து ‘ஓ அவர் ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து இருக்க வேண்டும் வேண்டுமென்று சொல்ல முடியாது. அதனால் டி-20 போட்டிகளில் முடிந்தவரை அவருக்கு வாய்ப்புகள் கொடுக்க வேண்டும். அவர் அதனை சரியாக பயன்படுத்தவில்லை என்றால் மாற்றம் செய்யலாம். ஆனால் ஒருநாள் அல்லது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடுகிறார் என்பதற்காக மாற்றம் செய்ய கூடாது.” என்று கூறியுள்ளார் தினேஷ் கார்த்திக்.

ரிஷாப் இறுதியாக விளையாடிய 10 டி-20 போட்டிகளில் : 11, 6, 6, 3, 27, 0, 0, 0, 20, 17 ரன்களை மட்டுமே அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.