ரோஹித் இல்லை ; எனக்கு தெரிந்து இந்த பையன் தொடக்க வீரராக களமிறங்கினால் சிறப்பாக இருக்கும் ; யுவ்ராஜ் சிங் ஓபன் டாக் ;

இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடர் போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில் இப்பொழுது பங்களாதேஷ் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கான மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளும் நடைபெற உள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த முதல் நாள் போட்டியில் பங்களாதேஷ் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியுள்ளனர். அதுமட்டுமின்றி, இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று மதியம் 12:30 மணியளவில் தொடங்க இருக்கிறது. அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.

சர்வதேச போட்டிகளில் சொதப்பும் இந்திய கிரிக்கெட் அணி :

எப்பொழுதும் மற்ற அணிகளுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை, ஆசிய கோப்பை போன்ற சர்வதேச நாடுகள் பங்கேற்கும் போட்டிகளில் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி மோசமான நிலையில் தோல்வியை பெற்று வருகிறது இந்திய.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை போட்டியிலும் சூப்பர் 4 சுற்றில் இருந்தும், டி-20 உலகக்கோப்பை போட்டியில் அரையிறுதி சுற்றில் இருந்தும் வெளியேறியுள்ளது இந்திய. அதற்கு இதுதான் காரணம் என்று பலர் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் தான் காரணம் என்று பல கூறியுள்ளார்.

தொடக்க ஆட்டம் சரியாக விளையாடவில்லை என்றால் நிச்சியமாக அணியில் இருக்கும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் கடினமான சூழல் உருவாகும். அடுத்த ஆண்டு இறுதியில் 2023 நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பை போட்டிக்கு இப்பொழுதில் இருந்தே அதற்க்கான அணியை தயார் செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ள நிலையில் தொடக்க வீரராக யார் களமிறங்கினால் சிறப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

நிச்சியமாக இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா உறுதி தான். அவருடன் யார் பார்ட்னெர்ஷிப் செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது ஒருவேளை ஷிகர் தவான ? இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவ்ராஜ் சிங் கூறுகையில் : “அடுத்த ஆண்டு உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியின் தொடக்க வீரராக சுப்மன் கில் களமிறங்கினால் சிறப்பாக இருக்கும். ஏனென்றால், தொடர்ச்சியாக அனைத்து விதமான போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். அதனால் நாம் நம்புகிறேன், அவர் (சுப்மன் கில்) 2023 ஒருநாள் உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியின் சரியான தொடக்க வீரர் என்று.”

“கடினமாக முயற்சி செய்து, அனைத்து விஷயங்களையும் சிறப்பாக செய்து வருகிறார் சுப்மன் கில். அடுத்த 10 ஆண்டுகள் இவரது விளையாட்டு சிறப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.” என்று கூறியுள்ளார் யுவ்ராஜ் சிங்.