மும்பை மதிப்பு 10,660 கோடியாம் ; சென்னை மதிப்பு தெரியுமா கொஞ்ச கமிதான் ; முழு விவரம் உள்ளே ;

16ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர், இன்று (மார்ச் 31) தொடங்கவிருக்கும் நிலையில், அதில் பங்குபெறும் அணிகளின் சிக்ஸர்கள், பவுண்டரிகள், விக்கெட்டுகள் போன்ற புள்ளி விவரங்களைத் தாண்டி, வணிக ரீதியில் அவற்றின் மதிப்பு என்ன? என்ற தகவல்களை சற்று விரிவாகப் பார்ப்போம்!

கடந்த 2022- ஆம் ஆண்டு நிலவரப்படி, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தான் மதிப்பு மிகுந்த அணியாகத் திகழ்கிறது. இதன் சந்தை மதிப்பு 10,660 கோடி ரூபாய் என்கிறது ஃபோர்ப்ஸ்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சந்தை மதிப்பு 9,430 கோடி ரூபாய் ஆகும். இதன் உரிமையாளர் இந்தியா சிமெண்ட்ஸ். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சந்தை மதிப்பு 9,020 கோடி ரூபாய் ஆகும். இந்த அணியின் உரிமையாளர் பாலிவுட் நடிகர் ஷாருக்கான்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் சந்தை மதிப்பு 8,815 கோடி ரூபாய் ஆகும். டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் மதிப்பு 8,487 கோடி ரூபாய் ஆகும். JSW Sports உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த அணியின் உரிமையாளர்கள் ஆவர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் மதிப்பு 8,405 கோடி ரூபாய் ஆகும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சந்தை மதிப்பு 8,200 கோடி ரூபாய் ஆகும். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சந்தை மதிப்பு ரூபாய் 7,950 கோடி ஆகும்.

இந்த அணியின் உரிமையாளர் சன் நெட்வொர் நிறுவனம். பஞ்சாப் கிங்ஸ் அணியின் சந்தை மதிப்பு ரூபாய் 7,400 கோடி ஆகும். நடிகை பிரீத்தி ஜிந்தா இந்த அணியின் உரிமையாளர். குஜராத் டைட்டன்ஸ் அணியின் சந்தை மதிப்பு 6,970 கோடி ரூபாய் ஆகும்.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில், இன்று இரவு 07.30 மணிக்கு நடப்பு ஐ.பி.எல்.கிரிக்கெட் தொடரின் முதல் லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு முறையும் கோப்பையை வென்றுள்ளனர்.