ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை விளாசிய வீரர்களின் பட்டியல்! இது நம்ம list-லையே இல்லையே ;

16ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர், இன்று (மார்ச் 31) மாலை குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்கவுள்ளது.

இந்த விழாவில், ஐ.பி.எல். நிர்வாகிகள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கவுள்ள 10 அணிகளின் கேப்டன்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொள்ள உள்ளனர்.

இன்று (மார்ச் 31) இரவு 07.30 மணிக்கு நடைபெறும் முதல் லீக் போட்டியில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை, நரேந்திர மோடி மைதானத்தில் எதிர்கொள்கிறது.

அனைத்து அணிகளின் வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், காயங்கள் மற்றும் தனிப்பட்ட காரணங்களால் வீரர்கள் அடுத்தடுத்து, ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகி வருவது, ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மற்றொருபுறம், அணி நிர்வாகத்தினர் மாற்று வீரர்களைத் தேர்வு செய்து அறிவித்து வருகின்றனர்.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அதிக ரன்களை விளாசிய டாப் 10 வீரர்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அதிக ரன்களை விளாசிய வீரர்களின் பட்டியலில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி, 223 போட்டிகளில் விளையாடி 6,624 ரன்களை குவித்து முதலிடத்தில் உள்ளார். 5 சதங்களுடன், 44 அரை சதங்களையும் எடுத்துள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான், 206 ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 6,243 ரன்களைக் குவித்து இரண்டாவது இடத்தில் உள்ளார். 2 சதங்களையும், 47 அரை சதங்களையும் அடித்து விளாசியுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, 227 ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி, 5,879 ரன்களை எடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளார். அவர் 40 அரை சதங்களையும், ஒரு சதத்தையும் அடித்துள்ளார்.

டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான், 206 போட்டிகளில் விளையாடி 6,243 ரன்களை எடுத்து, நான்காவது இடத்தில் உள்ளார். அவர் 47 அரை சதங்களையும், 2 சதங்களையும் எடுத்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா, 205 போட்டிகளில் விளையாடி 5,528 ரன்களை அடித்து ஐந்தாவது இடத்தில் உள்ளார். அவர் 39 அரை சதங்களையும், ஒரு சதத்தையும் பதிவு செய்துள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஏ.பி.டிவில்லியர்ஸ், 184 ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி 5,162 ரன்களை எடுத்து ஆறாவது இடத்தில் உள்ளார். அவர் 40 அரை சதங்களையும், 3 சதங்களையும் குவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, 234 ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி, 4,978 ரன்களை குவித்து பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளார். அவர் 24 அரை சதங்களையும் பதிவுச் செய்துள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீரர் கிறிஸ் கெயில், 142 போட்டிகளில் விளையாடி 4,965 ரன்களை குவித்து எட்டாவது இடத்தில் உள்ளார். அவர் 31 அரை சதங்களையும், 6 சதங்களையும் விளாசியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய ராபின் உத்தப்பா, 205 ஐ.பி.எல். போட்டிகளில் கலந்துக் கொண்டு 4,952 ரன்களை குவித்து பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளார். அவர் 27 அரை சதங்களை விளாசியுள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக், 229 ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்று, 4,376 ரன்களை குவித்து பத்தாவது இடத்தில் உள்ளார். அவர் 20 அரை சதங்களையும் பதிவு செய்துள்ளார்.