இருக்கு சிஎஸ்கே அணியில் இடம் கிடைப்பது மிகவும் கடினம்…! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள் ..! யார் அது ?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா இல்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

2008ஆம் ஆண்டு ஆரம்பித்த ஐபிஎல் போட்டி ரசிகர்களின் ஆதரவை பெற்று சிறப்பான முறையில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி ஆரம்பித்த ஐபிஎல் 2021, வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

இதுவரை 22 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் , புள்ளிபட்டியலின் முதல் இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், இரண்டாவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மூன்றாவது இடத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், நான்காவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் உள்ளது.

கடந்த ஆண்டு ஐபிஎல் 2020, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகவும் மோசமான ஆண்டாக இருந்துள்ளது. அதனால் இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் புதிதாக ராபின் உத்தப்பா, மொயின் அலி, கிருஷ்ணப்ப கவுதம் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அதில் மொயின் அலி , சிஎஸ்கே அணிக்கு முக்கியமான வீரராக இடம்பெற்றுள்ளார். ருதுராஜ் கெய்க்வாட் சரியாக விளையாடவில்லை என்றால் கூட ராபின் உத்தப்பா இருக்கிறார். ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முன்னாள் ஆல் -ரவுண்டர் ஆன கிருஷ்ணப்ப கவுதம் யாருக்கு பதிலாக இடம் பெறுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதுமட்டுமின்றி சேனனி சூப்பர் கிங்ஸ் அணி, ஹரி ஷங்கர் ரெட்டி, கிருஷ்ணப்ப கவுதம், ஜெகதீசன், போன்ற வீரர்கள் இன்னும் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கின்றன்னார். அவர்களுக்கு சிஎஸ்கே அணியில் வாய்ப்பு கிடைப்பது என்பது மிகவும் கடினம்.

ஏனென்றால் அணியில் இருக்கும் ரெய்னா, தோனி, டுப்ளஸிஸ் , அம்பதி ராயுடு, மொயின் அலி, சாம் கரண், பிராவோ, தீபக் சாகர் , தாகூர், ஜடேஜா,இம்ரான் தாஹிர், லுங்கி நிகிடி போன்ற முன்னணி வீர்ரகள் இடம்பெற்றுள்ளதால் மற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் தான்….!

இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 போட்டிகளில் விளையாடி 4 போட்டியில் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. அதேபோல இதுவரை நடந்த எல்ல போட்டிகளிலும் சேர்த்தி சிஎஸ்கே முதல் பேட்டிங் செய்ததில் குறைந்தபட்ச ரன்களான 188 ரன்களை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.