ரொம்ப ஆக்குரோஷமா கத்துனா .. விராட் கோலிக்கு காத்திருந்த அதிர்ச்சி…! வைரலாகும் வீடியோ ..!

விக்கெட்டை கைப்பற்றிவிட்டார் என்று நினைத்த விராட் கோலிக்கு காத்திருந்த அதரிச்சி..! வைரலாகும் வீடியோ..!!

ஐபிஎல் 2021, நேற்று நடந்த 22வது போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் , ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டி நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்த நிலையில் 171 ரன்களை எடுத்துள்ளனர். அதில் விராட் கோலி 12 ரங்கள், தேவ்தத் படிக்கல் 17 ரன்கள், ரஜத் பட்டிடார் 31 ரன்கள், மேக்ஸ்வெல் 25 ரன்கள், டிவில்லியர்ஸ் 75 ரன்கள் மற்றும் வாஷிங்டன் சுந்தர் 6 ரன்களை விளாசியுள்ளனர்.

பின்பு 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி இறுதிவரை போராடி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதில் ப்ரித்வி ஷாவ் 21 ரன்கள், தவான் 6 ரன்கள், ஸ்டீவ் ஸ்மித் 4 ரன்கள், ரிஷாப் பண்ட் 58 ரன்கள், மார்கஸ் ஸ்டோனிஸ் 22 ரன்கள் மற்றும் சிம்ரோன் ஹெட்மியர் 53 ரன்களை எடுத்துள்ளனர்.

இறுதிவரை வெற்றிக்காக போராடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு மிஞ்சியது தோல்வியே. வெற்றியை கைப்பற்றிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 10 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் முதல் இடத்திலும், தோல்வியடைந்த டெல்லி கேபிட்டல்ஸ் அணி 8 புள்ளிகளுடன் 3வைத்து இடத்திலும் உள்ளது.

நேற்று நடந்த போட்டியில் பெங்களூர் அணி பந்து வீசும் போது ; 6வது ஓவரில் வாஷிங்டன் சுந்தர் வீசிய பந்தை டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷாப் பண்ட் எதிர்கொண்டார். அப்பொழுது LBW கேட்ட வாஷிங்டன் சுந்தருக்கு அவுட் என்று மைதானத்தில் உள்ள நடுவர் சொல்லிவிட்டார்.

அதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மற்றும் விராட் கோலி மிகவும் ஆக்குரோஷமாக கத்தி அதனை கொண்டாடினார். அனால் ரிஷாப் பண்ட் டிவி நடுவரிடம் review கேட்டார். அப்பொழுது LBW பார்க்கும்போது அது நாட் அவுட் என்று கூறிவிட்டதால், விராட் கோலியின் முகம் அப்படியே மாறிவிட்டது.

அதனை வீடியோ இப்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது..!! வீடியோ;