தோனி பண்ண Advice, விழுந்து விழுந்து சிரித்த ஜடேஜா ..! காரணம் இதுதான்….!

தோனி சொன்ன வரத்தை இப்பொழுது வைரலாக பரவி வருகிறது. தோனி சொன்ன வார்த்தையால் ஜடேஜாவுக்கு சிறப்பை அடக்க முடியவில்லை….! அப்படி என்ன சொன்னார் தோனி ..?

ஐபிஎல் 2021 ஆரம்பித்து சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது, அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். கடந்த 2008ஆம் ஆண்டு ஆரம்பித்த ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் ரசிகர்களின் ஆதரவை பெற்று ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

சில தினங்களுக்கு முன்பு நடந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தனர்.

முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 191 ரன்களை எடுத்துள்ளார். அதில் ருதுராஜ் கெய்க்வாட் 33 ரன்கள், டுப்ளஸிஸ் 50 ரன்கள், சுரேஷ் ரெய்னா 24 ரன்கள், அம்பதி ராயுடு 14 ரன்கள், ஜடேஜா 62 ரன்களை விளாசியுள்ளனர்.

பின்பு 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இறுதிவரை போராடி 122 ரன்களை அடித்துள்ளனர். அதில் விராட் கோலி 8 ரன்கள், தேவ்தத் படிக்கல் 34 ரன்கள், வாஷிங்டன் சுந்தர் 7 ரன்கள், மேக்ஸ்வெல் 22 ரன்கள், டிவில்லியர்ஸ் 4 ரன்கள், டேனியல் கிறிஸ்டின் 1 ரன்களை அடித்துள்ளனர்.

சிஎஸ்கே அணி பவுலிங் செய்யும்போது 10வது ஓவரில் பந்தை வீசிய ஜடேஜா, டிவில்லியர்ஸ் விக்கெட்டை கைப்பற்றினார். அதேபோல 8வது ஓவரிலும் மேக்ஸ்வெல் விக்கெட்டையும் கைப்பற்றினார். அவர்களுக்கு ஹிந்தி தெரியாது, என்றதால் ஸ்டம்ப் பின்னல் இருந்த தோனி , ஜடேஜாவுக்கு பல அறிவுரையை ஹிந்தியில் பேசி (டிவில்லியர்ஸ் மற்றும் மேக்ஸ்வெல்) விக்கெட்டை கைப்பற்ற உதவி செய்தார் தோனி.

டிவில்லியர்ஸ் -க்கு பிறகு ஹர்ஷல் பட்டேல் பேட்டிங் செய்ய வரும்போது, இனிமேல் நம்ம ஹிந்தியில் பேசினால் அது அவருக்கு (ஹர்ஷல் பட்டேல்)-லுக்கு தெரியும் என்று கூறினார். அதனால் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தார் ஜடேஜா.

அதன் வீடியோ இப்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.