மாஸ்டர் பிளான் ஆ ? CSK அணியில் களமிறங்க போகும் Mystery ஸ்பின்னர் ; அப்போ வெற்றிதானா ?

0

ஐபிஎல் 2022 : ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் கடந்த மார்ச் 26ஆம் தேதி முதல் நடைபெற தொடங்கியது. இதுவரை வெற்றிகரமாக 15 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது.

ஆனால் சென்னை அணி இந்த ஆண்டு மிகவும் மோசமான ஆண்டாக மாறி வருகிறது தான் உண்மை. இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியை பெற்று மிகவும் மோசமான நிலையில் உள்ளது சென்னை. அதற்கு பேட்டிங் ஆ ? பவுலிங் ஆ? அல்லது கேப்டன் சரியில்லையா என்று பல குழப்பங்கள் ரசிகர்கள் இடையே எழுந்து வருகின்றனர்.

முதல் போட்டியில் 131 ரன்களை அடித்தது சென்னை, அதனால் பேட்டிங் சரியில்லை என்ற கருத்து எழுந்தது. இரண்டாவது போட்டியில் 210 ரன்களை அடித்தும் சென்னை அணி தோல்வியை பெற்றது, அதனால் பவுலிங் மோசமான என்று கருத்து எழுந்தது. மூன்றாவது போட்டியில் பேட்டிங் மோசமாக இருந்த காரணத்தால் சென்னை அணிக்கு தோல்வி தான் கிடைத்தது.

இதுவரை கடந்த 14 ஆண்டுகளாக சென்னை அணியை சிறப்பாக வழிநடத்தி வந்துள்ளார் மகேந்திர சிங் தோனி. இதுவரை தோனி தலைமையிலான சென்னை அணி நான்கு முறை சாம்பியன் படத்தை வென்றுள்ளது. பின்பு இந்த ஆண்டு தொடக்கத்தில் நான் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன் என்று அறிவித்தார் தோனி.

அவரை தொடர்ந்து இப்பொழுது சென்னை அணியை வழிநடத்துவது ரவீந்திர ஜடேஜா. நாளை மதியம் நடைபெற உள்ள போட்டியில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியும் மோத உள்ளனர்.

இந்த போட்டி இரு அணிகளுக்கு மிகவும் முக்கியமான போட்டியாகும். ஏனென்றால் இதுவரை இரு அணிகளும் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், சென்னை வீரர்கள் பயிற்சி செய்யும் வீடியோ இப்பொழுது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

கடந்த போட்டியில் சென்னை அணியின் ப்ளேயிங் 11ல் இடம்பெற்ற பிரிட்டோரியஸ் சிறப்பாக பவுலிங் செய்து வந்தார். அதனால் அவருக்கு நிச்சியமாக ப்ளேயிங் 11ல் இடம் நிச்சியம். அதுமட்டுமின்றி, இந்த முறை இலங்கை அணியை சேர்ந்த சுழல் பந்து வீச்சாளர் தீக்சஹனா தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

தீக்சஹனா அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அணியில் தொடர் தோல்விக்கு என்ன காரணம் ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here