இவர் நினைத்தால் நிச்சியமாக ஒரு ஓவர் முழுவதும் யாக்கர் பவுலிங் செய்வார் ; தமிழக வீரரை பற்றி பேசிய; சுட்டி குழந்தை சாம் கரன் பேட்டி ;

ஐபிஎல் 2022 போட்டிகள் கடந்த மார்ச் 26ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இதுவரை 14 போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை அணி விளையாடிய அனைத்து மூன்று போட்டிகளும் தோல்வியை பெற்றுள்ளது.

அதற்கு என்ன தான் காரணம் என்று பலர் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். கடந்த 2020ஆம் ஆண்டு சென்னை அணி மிகவும் மோசமான நிலையில் இருந்தனர். அது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் அந்த நேரத்தில் சென்னை அணியில் அருமையாக விளையாடி வந்தார் சாம் கரன்.

ஆனால் இந்த ஆண்டு இங்கிலாந்து வீரர் சிலர் டெஸ்ட் போட்டியில் கவனம் செலுத்த வேண்டும் என்ற காரணத்தால் ஐபிஎல் டி-20 2022 போட்டிகளில் விளையாட மறுத்துவிட்டனர். சாம் கரன் கடந்த 2019ஆம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம்பெற்று வந்துள்ளார்.

ஆனால் வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் அடுத்த ஆண்டு (2020 மற்றும் 2021) ஆகிய இரு ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வந்துள்ளார். ஐபிஎல் 2022 போட்டிகளை பார்த்து வரும் சாம் கரன் சமீபத்தில் சில முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார்.

அதில் “கடந்த ஆண்டு நான் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டி புனேவில் நடைபெற்றது. சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் பவுலர் நடராஜன் வீசிய பவுலிங்கை நான் எதிர்கொண்டுள்ளேன். அவரது பவுலிங் மிகவும் அருமையாக இருக்கும். எனக்கு தெரிந்து நடராஜன் தான் ஒரு ஓவர் முழுவதும் யாக்கர் பவுலிங் செய்வார்”.

“நடராஜன் போன்ற வீரர் நிச்சியமாக அனைத்து அணிகளும் இருக்க வேண்டிய வீரர். நடராஜன் ஒரு இடது காய் பவுலர், அதில் சிறப்பாக ஸ்விங் சிஏய கூடிய பவுலர் தான். சமீபத்தில் நடந்து முடிந்த போட்டியில் நடராஜன் , ஹர்டிக் பாண்டியாவுக்கு பவுலிங் செய்தது மிகவும் அற்ப்புதமான ஒன்று.”

“அதுவும் அவர் மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாட தொடங்கியுள்ளார். அதனை பார்க்கும்போது சந்தோசமாக உள்ளது என்று கூறியுள்ளார் சாம் கரன்.”

தமிழக வீரரான நடராஜன் 2017ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் அறிமுகம் ஆனார். பின்னர் கடந்த 2020 ஆம் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடி பின்பு இந்திய அணியில் இடம்பெற்றார் நடராஜன். ஆனால் சமீபத்தில் நடந்து முடிந்த போட்டிகளில் இந்திய அணியில் ஏன் நடராஜன் இடம்பெறவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது..!

இனிவரும் போட்டிகளை நிச்சியமாக நடராஜன் இந்திய அணியில் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இந்திய அணியில் நடராஜன் இருக்க வேண்டுமா ?? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!