பா..! பையன் பட்டைய கிளப்பிட்டாரு..! அவருடைய ஆட்டத்திற்கு நான் தலை வணங்குகிறேன் ; ஹார்டிக் பாண்டிய பேட்டி ;

0

நேற்று இரவு 7:30 மணியளவில் நடைபெற்ற போட்டியில் ஹார்டிக் பாண்டிய தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோத உள்ளனர். அதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி தொடக்கத்தில் இருந்து சரியான பார்ட்னெர்ஷிப் அமையாத காரணத்தால் சற்று பின்னடைவை ஏற்பட்டது. அதில் லிவிங்ஸ்டன் அதிரடியான ஆட்டத்தால் ரன்களை அடித்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்த நிலையில் 189 ரன்களை அடித்தது பஞ்சாப்.

அதில் மயங்க் அகர்வால் 5, தவான் 35, பரிஸ்டோவ் 8, லிவிங்ஸ்டன் 64, ஜித்டேஷ் சர்மா 23, ஷாருக்கான் 15, ராகுல் சஹார் 22 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 190 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது குஜராத் டைட்டன்ஸ் அணி. தொடக்கத்தில் மாத்தியூ வெட் 6 ரன்களை அடித்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

தொடக்கத்திலேயே குஜராத் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும் சுமன் கில், சாய் சுதர்சன் போன்ற வீரர்களின் அதிரடியான விளையாட்டால் குஜராத் அணி வெற்றி பெற்றது. அதிலும் இறுதி பந்து வரை போராடிய குஜராத் அணி 6 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளது குஜராத்.

போட்டியை முடிந்த பிறகு வெற்றியை குறித்து பேசிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனான ஹார்டிக் பாண்டிய கூறுகையில் ; “போட்டி என்றால் அதில் ஏற்றம் இறக்கம் இருப்பது தான் இயல்பு. ஆனால் நான் ராகுல் திவேதியவை நான் தலை வணங்குகிறேன். அவரது அதிரடியான ஆட்டம் அருமையாக இருந்தது.”

“அதுவும் அந்த இறுதி நேரத்தில் களமிறங்கி ரன்களை அடிப்பது மிகவும் கடினம். அந்த நேரத்தில் மன அழுத்தம் இருப்பது உண்மை தான். ஆனால் அதனை அவர் அதனை சமாளித்து சரியாக பயன்படுத்தி போட்டியை சிறப்பாக விளையாடியுள்ளார். அதுமட்டுமின்றி, சுமன் கில் மற்றும் சாய் இருவரும் சிறப்பாக பார்ட்னெர்ஷிப் செய்தனர்.”

“அதனால் தான் ரன்களை அடிக்க முடிந்தது. நான் இப்பொழுது பேட்டிங் சிறப்பாக செய்து கொண்டே வருகிறேன். நான் நான்கு ஓவர் முழுவதும் பவுலிங் செய்தால் சற்று சோர்வாக தான் உள்ளது. இருந்தாலும் அதில் இருந்து நான் மீண்டு கொண்டு வருகிறேன் என்று கூறியுள்ளார் குஜராத் கேப்டன் ஹார்டிக் பாண்டிய.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here