ஆபத்தில் இருக்கும் சென்னை ; ப்ளே -ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதில் சிரமம் தான் ; காரணம் இதுதான் ;

0

ஐபிஎல் : இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த ஐபிஎல் 2023 போட்டிகள் கடந்த மார்ச் 31ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, நாளை இரவுடன் ஐபிஎல் 2023 போட்டிக்கான லீக் போட்டிகள் நிறைவுக்கு வர போகிறது.

அத்துடன் ஐபிஎல் ப்ளே – ஆஃப் சுற்றுகள் தொடங்க இருக்கிறது. அதில் முதல் அணியாக குஜராத் டைட்டன்ஸ் அணி தேர்வாகியுள்ளது. மீதமுள்ள மூன்று இடங்களில் இடம்பெற சென்னை, மும்பை, ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூர் மற்றும் லக்னோ அணிகள் கடுமையான போட்டியை எதிர்கொண்டு வருகின்றனர்.

சென்னை அணி இந்த முறை ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா ? இல்லையா ?

மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த ஆண்டு பேட்டிங் லைன் அருமையாக இருப்பதால் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இருப்பினும் இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் 7 போட்டியில் வென்று 15 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது சென்னை.

இரண்டாவது இடத்தில் இருக்கும் சென்னை அணிக்கு ஆபத்தா ? ஆமாம், இன்று மதியம் 3மணியளவில் தொடங்க இருக்கின்ற போட்டியில் டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ளனர்.

இதில் சென்னை அணி வெற்றிபெற்றால் 17 புள்ளிகளுடன் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். அப்படி இல்லையென்றால் இன்று இரவு நடைபெற உள்ள போட்டியில் லக்னோ அணியை கொல்கத்தா அணி வெல்ல வேண்டும். ஒருவேளை கொல்கத்தா அணியை லக்னோ அணி வென்றுவிட்டால், நாளை நடைபெற இருக்கின்ற போட்டியில் மும்பை அணியை சன்ரைசர்ஸ் வெல்ல வேண்டும்.

அப்படி இல்லை, மும்பை அணி லக்னோ மற்றும் மும்பை அணிகள் வென்றுவிட்டால், பெங்களூர் மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் குஜராத் அணி வெற்றிபெற்றால் மட்டுமே சென்னை அணியால் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இதனை செய்வதற்கு சென்னை அணி இன்றைய போட்டியில் டெல்லி அணியை வென்றால் போதுமான ஒன்று தான். ஐபிஎல் தொடங்கிய முதல் ஆண்டில் இருந்து இதுவரை 15 சீசன் நடைபெற்று முடிந்துள்ளது. அதில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு முறை சாம்பியன் படத்தை வென்றுள்ளனர்.

இன்றைய போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை வென்று சென்னை அணி ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா ? இல்லையா ?? ஐந்தாவது முறையாக சென்னை அணி கோப்பையை வெல்லுமா ? உங்கள் கருத்து என்ன ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here