தோனியின் உண்மையான தைரியம் என்னவென்று யாருக்கும் தெரியாது ; கே.எல்.ராகுல் ஓபன் டாக் ;

0

ஐபிஎல் 2023 : இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த ஐபிஎல் 2023 போட்டிகள் கடந்த மார்ச் 31ஆம் தேதியில் இருந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 54 போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.

அதுமட்டுமின்றி, இன்னும் சில நாட்களில் லீக் போட்டிகள் அனைத்தும் முடிவுக்கு வர போகின்றனர். அதன்பின்பு ரசிகர்கள் எதிர்பார்க்கும் ப்ளே – ஆஃப் சுற்றுகள் நடைபெற உள்ளது. அதனால் முதல் நான்கு இடத்தை கைப்பற்ற சென்னை, பெங்களூர், மும்பை, லக்னோ, ராஜஸ்தான், கொல்கத்தா போன்ற அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

அசத்தி வரும் சென்னை அணியின் கேப்டன் :

41 வயதான தோனி இன்னும் ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார். அதுமட்டுமின்றி, இந்த ஆண்டு அவரது (தோனி) பேட்டிங் மிகவும் அருமையாக இருக்கிறது. கடந்த 2020ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து விலகிய தோனி வெறும் ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார்.

அதுமட்டுமின்றி, தோனி தலைமையிலான சென்னை அணியில் விளையாட வேண்டும், தோனி கீழ் அவரது அணியில் ஒருமுறையாவது விளையாட வேண்டுமென்று அனைத்து வீரர்களுக்கும் எண்ணம் இருக்கும். அந்த அளவிற்கு லாம் வீரர்களிடையே நல்ல மரியாதையை பெற்றுள்ளார் தோனி.

எந்த சூழ்நிலை ஏற்பட்டாலும் விட்டுக்கொடுக்காமல் வெற்றியை எப்படி கைப்பற்ற வேண்டுமென்று தான் யோசிப்பார். அதுமட்டுமின்றி, தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மட்டுமே அனைத்து விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்றுள்ளது இந்திய. அவ்வப்போது தோனியை பற்றியும் அவரது விளையாட்டை பற்றி சக வீரர்கள் கூறுவது வழக்கம் தான்.

அதேபோல தான் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான கே.எல்.ராகுல் சமீபத்தில் தோனியை பற்றி சுவாரஷியமான தகவலை பகிர்ந்துள்ளார். அதில் ” தோனி தான் என்னுடைய முதல் கேப்டன். நான் தோனி எப்படி அணியை வழிநடத்துவார் என்பதை பார்த்துள்ளேன். அதுமட்டுமின்றி, மற்ற வீரர்களிடையே நல்ல ஒரு புரிதல் வைத்திருப்பார் தோனி, இதனை நான் அவரிடம் இருந்து கற்றுக்கொண்டுள்ளேன்.”

“நம் அணிக்காக விளையாடும் வீரர்களிடையே நல்ல புரிதல் வைத்திருப்பது தான் சிறந்த விஷயம். அவர் சர்வதேச போட்டிகளில் இருந்து விலகிய பிறகு ட்ரெஸ்ஸிங் ரூமில் அவர் இல்லை என்பது ஒரு மாதிரியான ஏக்கத்தை ஏற்படுத்தியது. அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் ஒரு ஆசை இருக்கும், அதில் தோனி இருக்கும் அணியில் விளையாட வேண்டுமென்று.”

“அவரது அணுகுமுறை எப்பொழுது சாதாரணமாக தான் இருக்கும். விளையாடி கொண்டு இருக்கும்போது தோனியின் எப்பொழுதும் அமைதியாகவே இருப்பார். அதுமட்டுமின்றி, தனி தனியாக அனைத்து வீரர்களிடமும் பேசி புரிந்து கொள்ளவார் தோனி. அணியில் இருக்கும் அனைத்து வீரர்களை பற்றியும் தெரிந்து கொண்டுள்ளார் தோனி, அதனால் தான் மிகப்பெரிய தலைவராக (கேப்டன்) இருக்கிறார்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here