கடந்த 19ம் தேதி அன்று ஆரம்பித்த ஐபிஎல் டி20 போட்டி சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகிறது. இன்று ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மற்றும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுகின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. பஞ்சாப் எதிரான போட்டியிலாவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லுமா என்று ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இன்று இரவு ஏழரை மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு இடையேயான போட்டி துபாயில் உள்ள சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த ஐபிஎல் 20 20 கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தலா 4 போட்டிகளில் விளையாடி உள்ள நிலையில் அதில் மூன்று போட்டிகள் தோல்வியை சந்தித்துள்ளது இரு அணிகளும்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் பேட்டிங்:
இதுவரை நடைபெற்ற போட்டியில் கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் சதம் அடித்துள்ளனர். பஞ்சாப் அணியை பொறுத்தவரை பேட்டிங் பகுதி மிகவும் வலுவாக காணப்படுகின்றன. பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் நன்றாக ஆடினாலும் அதன் பின்னர் இருக்கும் வீரர்கள் இந்த ஐபிஎல் 2020 போட்டியில் இதுவரையில் நல்ல ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஒருவேளை ராகுல் மட்டும் மயங்க் அகர்வால் முதல் 6 ஓவரில் அவுட் ஆகிவிட்டால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மிகவும் பின்னடைவை சந்திக்க நேரிடும்.
பஞ்சாப் அணிக்கு நேர்மாறானது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஏனென்றால் பஞ்சாப் அணியில் நல்ல ஒரு தொடக்க வீரர்கள் இருந்தாலும் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்யும் வீரர்கள் சொல்லும் அளவுக்கு இல்லை . ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இறுதியில் நல்லா ஆடினாலும் முதலில் பேட்டிங் செய்வதற்கு சிறந்த வீரர் இன்னும் தோன்றவில்லை.
சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங்:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய நான்கு போட்டிகளிலும் முதலில் இறங்கும் வாட்சன் மற்றும் விஜய் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முதல் மற்றும் மிடில் பேட்டிங் செய்யும் வீரர்கள் இதுவரை விளையாடியுள்ள போட்டிகளில் சோதப்பியுள்ளனர். ஒருவேளை வரும் போட்டிகளில் முதல் மட்டும் மிடில் பேட்டிங் செய்யும் வீரர்கள் நல்ல ஒரு தொடக்கத்தை ஏற்படுத்தினார் கண்டிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நல்ல ஒரு இரண்டு எடுப்பார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
இன்று விளையாடும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரிசமமான வீரர்கள் இருப்பதால் கண்டிப்பாக இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.