அடுத்த போட்டியில் ஒரு மாற்றத்துடன் களமிறங்க போகும் சென்னை அணி இதுதான் ; வெற்றியை கைப்பற்றுமா ? சிஎஸ்கே ?

ஐபிஎல் 2022: கடந்த 26ஆம் தேதி முதல் ஐபிஎல் 2022 போட்டிகளில் நடைபெற்று வருகின்றனர். இதுவரை நான்கு போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. ஐபிஎல் 2022யின் முதல் போட்டியில் விளையாடிய சென்னை அணிக்கு சரியான தொடக்க ஆட்டம் அமையவில்லை.

அதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு சரியான தொடக்க ஆட்டம் அமையவில்லை. இறுதியாக ஜடேஜா மற்றும் தோனியின் அதிரடியான ஆட்டத்தால் தான் சென்னை அணிக்கு ரன்கள் குவிந்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 131 ரன்களை அடித்தது சென்னை அணி. பின்பு கொல்கத்தா இறுதிவரை போராடி 18.3 ஓவர் முடிவில் 133 ரன்களை அடித்து வெற்றியை கைப்பற்றியுள்ளனர். சென்னை அணியின் தோல்வியை குறித்து பலர் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை அணி அடுத்த போட்டியில் ஆவது வெற்றியை கைப்பற்றுமா என்று சென்னை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். அதுமட்டுமின்றி, அடுத்த போட்டியில் சென்னை அணியின் நம்பிக்கையான ஆல் – ரவுண்டர் மொயின் அலி நிச்சியமாக அணியில் இடம்பெறுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அவர் மிச்சேல் சண்ட்னர் – க்கு பதிலாக சென்னை அணியில் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏன் அவர் (மொயின் அலி ) இங்கிலாந்து நாட்டில் இருந்து இந்தியாவுக்கு வர விசா சரியான நேரத்தில் கிடைக்காத காரணத்தால் தான் சற்று தாமதமாக இந்தியாவுக்கு வந்துள்ளார்.

மொயின் அலியின் டாப் ஆர்டர் பேட்டிங் நிச்சியமாக சென்னை அணிக்கு சற்று வலுவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதுமட்டுமின்றி, முதல் போட்டியில் சென்னை அடித்த ரன்கள் எல்லாம் சரி தான், ஏனென்றால் கொல்கத்தா அணி சென்னை அணியை வீழ்த்த 18.3 ஓவர் விளையாடியுள்ளது.

அதனால் மொயின் இடம்பெறும் பட்சத்தில் சென்னை அணிக்கு வலுவான சுழல் பந்து வீச்சு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை..! சென்னை அணிக்கு மொயின் அலி எந்த அளவிற்கு முக்கியமான வீரர் ?? என்று உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!