தோனி ஐபிஎல் 2020யில் இருந்து விலகப்போகிறாரா?? ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு !!!

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி கடந்த செப்டம்பர் 19ஆம் ஆரம்பித்தது. ஐபிஎல் என்றாலே கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் பரபரப்பு ஏற்படும். 2008 ஆம் ஆரம்பித்த ஐபிஎல் போட்டி 2020 ஆம் ஆண்டு வரை மக்களின் வரவேற்ப்பை பெற்று நடைபெற்று வருகிறது.

எல்லா வருடமும் ஏப்ரல் மாதத்தில் ஆரம்பிக்க வேண்டிய ஐபிஎல் போட்டி இந்த ஆண்டு 2020 மட்டும் செப்டெம்பர் மாதம் ஆரம்பித்துள்ளது. இதற்கு முழு காரணம் உலகம் முழுவதும் கோரோணா வைரஸ் தான். இந்தியாவில் வைரஸ் தாக்கம் அதிகம் உள்ளதால் இந்த ஆண்டு வேண்டாம் என்று பல நிபுணர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த ஐபிஎல் போட்டியை நடத்த வேண்டும் என்று முடிவு செய்த பிசிசிஐ , ரசிகர்கள் இல்லாமல் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு நாட்டில் நடத்த முடிவு செய்த பிசிசிஐ , இப்பொழுது சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் மூன்று முறை கோப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் மோசமான தோல்விகளை இந்த ஆண்டு ஐபிஎல் 2020யில் சந்தித்து வருகிறது. இதனால் தோனி ரசிகர்கள் மட்டுமின்றி சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களும் வருத்தத்துடன் இருக்கின்றன.

தொடர் தோல்வி காரணமாக தோனி மற்றும் கேதர் ஜாதவ் தான் காரணம் என்று சமுகவலைத்தளங்களில் அவர்களை அவதூறாக பேசிகின்றன ரசிகர்கள். இது ஒரு பக்கம் இருந்தாலும் , இன்னொரு பக்கம் தோனியின் மகளுக்கு கொலை மிரட்டல் மற்றும் கற்பழிப்பு மிரட்டலுக்கு விடுத்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடர் தோல்வி காரணமாக கோவமான சில ரசிகர்கள் இவ்வாறு செய்து வருகின்றனர்.

மிரட்டல் விடுத்த நபர் யார் என்று தெரியாமல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பிரச்சனை அதிகரித்து கொண்டே இருப்பதனால் தோனியின் பண்ணை வீட்டில் போலீஸ் பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை பிரச்சனைக்கு பிறகு சென்னை அணியில் தோனி இருப்பாரா??? இல்லை ரெய்னாவை போல நாடு திரும்புவாரா?? என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.