இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த டெஸ்ட் போட்டிக்கான தொடரில் 1 – 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது இந்திய. அதனை அடுத்து ஒருநாள் போட்டிக்கான தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றனர்.
முதல் ஒருநாள் போட்டியின் சுருக்கம் :
நேற்று இரவு 7மணியளவில் கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஷாய் ஹாப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சரியான பார்ட்னெர்ஷிப் அமையவில்லை. தொடர்ச்சியாக விக்கெட்டை பறிகொடுத்து கொண்டு வந்த வெஸ்ட் இண்டீஸ் 23 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி வெறும் 114 ரன்களை மட்டுமே அடித்தனர்.
அதில் பிராண்டன் கிங் 17, அளிக் அதனசா 22, ஷாய் ஹாப் (கேப்டன்) 43 ரன்களை அதிகபட்சமாக அடித்துள்ளனர். அதுமட்டுமின்றி அட்டகாசமாக பவுலிங் செய்த இந்திய அணியின் பவுலர்கள் குல்தீப் 4, ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். பின்பு 115 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டம் சிறப்பாக அமைந்தது.
தொடக்க வீரரான இஷான் கிஷான் 52 ரன்களை விளாசினார். ஆனால் தொடர்ச்சியாக விக்கெட்டை பறிகொடுத்த இந்திய கிரிக்கெட் 22.5 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்த நிலையில் 118 ரன்களை கைப்பற்றியது இந்திய. அதனால் 5 விக்கெட்டை வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வென்று 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது இந்திய.
நட்சத்திர வீரருக்கு ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் வாய்ப்பு கிடைக்குமா ?
இந்திய அணியின் முன்னணி வீரராக திகழும் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி வருகிறார். இருப்பினும் டி-20 போட்டியில் அதிரடி காட்டும் சூரியகுமார் யாதவ் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பெரிய அளவில் ரன்களை அடிப்பது இல்லை. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 19 ரன்களை மட்டுமே அடித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, 0,0,0,14,0,31,4,6,34 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் ஏன் சூர்யகுமார் யாதவிற்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுத்து வருகிறது பிசிசிஐ ? என்று பல கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் அவரவர் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
சூர்யகுமார் யாதவிற்கு தொடர்ச்சியாக இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட வாய்ப்பு கொடுக்க வேண்டுமா ? அல்லது சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டுமா ? உங்கள் கருத்து என்ன ?