இந்திய அணியை வென்று சாதனை படைக்க போகும் தென்னாபிரிக்கா அணி…! அப்படி என்ன சாதனை தெரியுமா ? இந்திய அந்த list-லையே இல்லை ;

0
Advertisement

இன்று மதியம் 2 மணி அளவில் தொடங்க உள்ளது கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய மற்றும் தெம்பா பவுமா தலைமையிலான தென்னாபிரிக்கா அணிக்கு இடையேயான மூன்றாவது போட்டி நடைபெற உள்ளது.

இதுவரை நடந்த இரு ஒருநாள் போட்டியிலும் தென்னாபிரிக்கா அணி தான் வென்றுள்ளது. முதல் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். அதனால் 2 – 0 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா அணி முன்னிலையில் மற்றுமின்றி தொடரையும் கைப்பற்றியுள்ளார்கள்.

இன்றைய போட்டி இந்திய அணிக்கு முக்கியமோ இல்லையோ… ஆனால் தென்னாபிரிக்கா அணிக்கு மிகவும் முக்கியமான போட்டியாமும். ஆமாம்…. ஒருவேளை இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் அது வெறும் ஆறுதல் வெற்றி தான். இதே, தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்றால் அது சாதனையாக மாற அதிக வாய்ப்பு உள்ளன.

ஆமாம்.. அப்படி என்ன சாதனை அது தெரியுமா ?? தென்னாபிரிக்கா அணி இதுவரை 19 முறை ஒருநாள் போட்டியில் Whitewash செய்துள்ளனர். இப்பொழுது இந்திய அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டியில் இரு போட்டிகளில் தென்னாபிரிக்கா அணி வென்றுள்ளது. இன்னும் ஒரு போட்டியில் வெற்றிபெற்றால் போதும் 20 முறை Whitewash செய்த சாதனை கிடைக்கும் தென்னாபிரிக்கா அணிக்கு.

இதுவரை புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் அணி 20 முறையும், தென்னாபிரிக்கா அணி 19 முறையும், நியூஸிலாந்து , ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தலா 16 முறை whitewash செய்துள்ளனர். இன்றைய போட்டியிலும் இந்திய அணியை வென்று தென்னாபிரிக்கா அணி பாகிஸ்தான் சாதனையை முறியடிக்குமா ? என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

ஒருவேளை இன்றைய போட்டியில் இந்திய அணி மற்றும் தோல்வி பெற்றால் , அதுதான் ஒருநாள் போட்டிக்கான வரலாற்றில் ஐந்தாவது முறை தொடரில் இருக்கும் அனைத்து போட்டியிலும் தோல்வி பெற்றது. கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி இன்றைய மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று ஆறுதல் வெற்றி பெறுமா ? இந்திய அணி ?? அல்லது தென்னாபிரிக்கா அணி சாதனை படைக்க போகிறதா??

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here