இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த போட்டி என்றால் அது ஐபிஎல் போட்டி தான் என்பதில் சந்தேகமில்லை. ஆமாம்…! கடந்த 2008ஆம் ஆண்டு முதல் இப்பொழுது வரை அதாவது 14 சீசன்கள் வெற்றி காரணமாக நடைபெற்று முடிந்துள்ளது.
மகேந்திர சிங் தோனி கடந்த 2008ஆம் ஆண்டு முதல் இப்பொழுது வரை அவர் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்தி வந்துள்ளார். அதுவும் 2018ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றார் தென்னாபிரிக்கா அணியின் சுழல் பந்து வீச்சாளரான முக்கியமான வீரராக களமிறங்கிய விளையாடி வந்துள்ளார்.
ஆனால் ஐபிஎல் 2020 மற்றும் 2021 போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற காரணத்தால் இம்ரான் தாகிருக்கு வாய்ப்பே கொடுப்பதில்லை. அதனால் அவரை அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டி 2022யின் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது சிஎஸ்கே அணியில் இம்ரான் தாகிர் இடம்பெறவில்லை.
நேற்று நடந்த லெஜெண்ட் லீக் கிரிக்கெட் 2022 போட்டியில் இம்ராம் தாகிர் ஒரு அதிரடி பேட்ஸ்மேனாக களமிறங்கி அடித்து தொம்சம் செய்துள்ளார். நேற்று நடந்த போட்டியில் வேல்டு ஜெண்ட்ஸ் மற்றும் இந்திய மகாராஜாஸ் அணிகள் மோதின. அதில் வேல்டு ஜெண்ட்ஸ் அணி 18 பந்துகளில் 47 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது.
Imran Tahir ! You Beauty 🔥
52 off 19 balls 💥#Cricket #LegendsLeagueCricket @llct20 pic.twitter.com/B1Hxoz6w9p— Mustafa Abid (@mmustafa_abid) January 22, 2022
அப்பொழுது களமிறங்கிய இம்ரான் தாகிர் ஒரு சூறாவளி போல களமிறங்கிய அடித்து தொம்சம் செய்துள்ளார். 19 பந்தில் 52 ரன்களை அடித்து அவரது அணிக்கு வெற்றியை வாங்கி பெற்றுக்கொடுத்துள்ளார். அதன்வீடியோ இப்பொழுது சமுகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நிச்சியமாக இந்த ஆண்டு ஐபிஎல் டி20 போட்டிகளில் இம்ரான் தாகிர் மற்றும் இடம்பெற்றால் அதிகமான விலைக்கு விற்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு ஐபிஎல் டி20 லீக் போட்டிகள் அனைத்தும் மும்பையில் உள்ள மூன்று மைதானத்தில் மட்டுமே நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.