இங்கிலாந்து அணியில் இவர் மிகவும் ஆபத்தான வீரர்; அதனால் தான் விக்கெட்டை கைப்பற்றினேன் ; புவனேஸ்வர் குமார் பேட்டி

0

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி-20 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று இரவு பர்மிங்காம் மைதானத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய கிரிக்கெட் அணிக்கு முதல் போட்டியை போல ஒரு தொடர்ச்சியான ஆட்டம் அமையவில்லை. ஒரு பின் ஒருவராக ஆட்டத்தில் இழந்துகொண்டே வந்தனர்.சரியாக பார்ட்னெர்ஷிப் ஆட்டத்தை இழந்த இந்திய அணியால் ரன்களை அடிக்க முடியாமல் போனது.

ஆனால் ஆல் – ரவுண்டர் ஜடேஜா, சிறப்பாக பேட்டிங் செய்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் ரன்களை விளாசினார். அதனால் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்த நிலையில் 170 ரன்களை அடித்தது இந்திய. அதில் ரோஹித் 31, ரிஷாப் பண்ட் 26, விராட்கோலி 1, சூரியகுமார் யாதவ் 15, ஹர்டிக் பாண்டிய 12, ரவீந்திர ஜடேஜா 46,தினேஷ் கார்த்திக் 12, ஹர்ஷல் பட்டேல் 13 ரன்களை அடித்தனர்.

பின்பு 171 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இங்கிலாந்து கிரிக்கெட் அணி. ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. ஏனென்றால், முதல் போட்டியை போலவே ரன்களை அடிக்காமல் ஆட்டத்தை இழந்தார் கேப்டன் மற்றும் அதிரடி வீரரான ஜோஸ் பட்லர்.

அதனால் இந்திய அணிக்கு அது சாதகமாக மாறியது. இருப்பினும் டேவிட் வில்லே, மொயின் அலி போன்ற வீரர்கள் அதிரடியாக விளையாடினாலும், அதில் பயனில்லாமல் போனது. அதனால் 17 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டை இழந்த இங்கிலாந்து அணியால் 121 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது.

அதில் ஜேசன் ராய் 0, ஜோஸ் பட்லர் 4, டேவிட் மலன் 19,லிவிங்ஸ்டன் 15, ஹார்ரி புரூக் 8, மொயின் அலி 35, டேவிட் வில்லே 33 ரன்களையும் அடித்துள்ளனர். அதனால் இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இப்பொழுது 2 – 0 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி முன்னிலையில் உள்ளது.

போட்டி முடிந்த பிறகு பேசிய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் கூறுகையில் ; “நான் எப்பொழுது ஸ்விங் பவுலிங் செய்தால் மகிழ்ச்சியாக இருப்பேன். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இங்கிலாந்தில் என்னால் சரியாக ஸ்விங் பவுலிங் செய்ய முடியாமல் போனது. ஆனால் இப்பொழுது அதனை சரியாக செய்வது மகிழ்ச்சியாக உள்ளது.”

“இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் மட்டும் பவர் ப்ளே முழுவதும் விளையாடிவிட்டால், அது மிகவும் ஆபத்தாக ,மாறிவிடும். ஏனென்றால் அவர் ஒரு அதிரடியான பேட்ஸ்மேன். எப்பொழுது பந்து ஸ்விங் ஆனால் நிச்சியமாக நம்பிக்கையாக இருக்கும். நான் இப்பொழுது பிட் ஆக இருக்கேனா இல்லையா என்று கேள்விக்கு பதில் சொல்ல விரும்பவில்லை.”

“நான் சில விஷயங்களை சரியாக செய்து வருகிறேன், அதனால் தான் விளையாடுகிறேன் என்று கூறியுள்ளார் புவனேஸ்வர் குமார்.” முதல் டி-20, மற்றும் இரண்டாவது டி-20 போட்டியில் ஜோஸ் பட்லர் விக்கெட்டை கைப்பற்றியது புவனேஸ்வர் குமார் தான். உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இவர் இடம்பெற வேண்டுமா ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here