ஐபிஎல் போட்டிகள் ஆரம்பித்து 20நாட்களுக்கு மேல் ஆகி விட்டது. எல்லா வருடம் போல இந்த வருடமும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது ஐபிஎல் t20 போட்டிகள். கோரோனா தாக்கத்தால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு நடந்த முடிவு செய்த பிசிசிஐ , அதேபோல் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டு ஐபிஎல் 2020 , சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய 6 போட்டிகளில் வெறும் 2 மட்டுமே வெற்றி பெற்று மீதமுள்ள 4 போட்டியிலும் தோல்வியை சந்தித்துள்ளது.
தொடர்ந்து மூன்று போட்டியில் தோற்றுப்போன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப்-க்கு எதிரான போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்.
கடந்த புதன்கிழமை அன்று கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 10 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. கோவம் ஆடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் கேப்டன் தோனி மற்றும் கேதர் ஜாதவ் தான் காரணம் என்று அவர்களை சமுகவலைத்தளங்களில் திட்டி வருகின்றன.
தோல்வியை குறித்து பேசிய தோனி; 2-3 ஓவரில் எதிரணியின் பந்து வீச்சு மிகவும் அருமையாக விளையாடினார். அதுமட்டுமின்றி மிடில் ஆடரில் விக்கெட் தொடர்ச்சியாக போய்விட்டது. எங்கள் பௌலர்கள் சிறப்பாக விளையாடினாலும் பேட்ஸ்மேன் அதனை வீனடித்து விட்டாராகள். அதுமட்டுமின்றி இறுதி ஓவர்களில் ஒரு பவுண்டரி கூட அடிக்க வில்லை என்று வேதனையுடன் கூறியுள்ளார் தோனி.
அடுத்த ஆட்டத்தில் கேதர் ஜாதவ் இருப்பாரா!!! இல்லையா என்ற கேள்விக்கு சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியுள்ளார் ;
சிஎஸ்கே அணியை பொறுத்தவரை எந்த வீரரையும் மாற்றம் செய்ய தேவை இல்லை. அதுமட்டுமின்றி கேதர் ஜாதவ் சூழல் பந்துகளை சிறப்பாக எதிர்கொள்ளவர் என்று நினைத்தோம் ஆனால் அது எதிராக மாறிவிட்டது. 4வது இடத்தில் அவருக்கு பதிலாக வெறும் யாரும் இல்லை என்று கூறியுள்ளார் ஸ்டீபன் பிளெமிங்
ஸ்டீபன் பிளமிங் சொல்வதை கவனித்தால் கண்டிப்பக கேதர் ஜாதவ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் இருப்பர் என்று எதிர்பார்க்க படுகிறது.