ரோஹித் சர்மா செய்த தவறை..! இந்த முறை கே.எல்.ராகுல் செய்ய போகிறாரா ? இந்த பையனுக்கு வாய்ப்பு கிடைக்குமா ?

0

இந்திய அணியில் இடம்பெற வேண்டுமா ?

கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் 20 லீக் போட்டிகள் நடந்து வருகிறது. இதுவரை மொத்தம் 14 சீசன் நடந்து முடிந்த நிலையில் இந்த ஆண்டு 15வது சீசன் நடந்து வருகிறது. அதுவும் இன்னும் சில நாட்களில் இறுதி போட்டியும் நடந்து முடிந்துவிடும். ஐபிஎல் தொடங்கிய பிறகு, இந்திய அணியில் வாய்ப்பு பெறுவது சுலபமாக மாறியது தான் உண்மை.

ஏனென்றால் ஐபிஎல் போட்டிகளில் யாரவது சிறப்பாக விளையாடுகிறார்கள் என்று தெரிந்தால் அவருக்கு நிச்சியமாக இந்திய அணியில் இடம் உண்டு என்பது தான் உண்மை. அதேபோல தான் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை கொடுத்து வருகிறது பிசிசிஐ.

ஐபிஎல் 2021:

கடந்த ஆண்டு சிறப்பாக விளையாடிய சென்னை அணி கோப்பையை வென்றது. அதில் தொடக்க வீரரான ருதுராஜ் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தார். அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு அதிக ரன்களை அடித்த பட்டியலில் முதல் இடத்தில் இருந்துள்ளார் ருதுராஜ் கெய்க்வாட்.

ஆனால், ஐபிஎல் போட்டிகள் முடிந்த பிறகு பல சீரியஸ் போட்டிகள் நடைபெற்றது. அப்பொழுது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் வாய்ப்புகள் கிடைக்காமல் வெளியே இருந்தார் ருதுராஜ். அதுமட்டுமின்றி, மிடில் பேட்ஸ்மேனாக விளையாடி கொண்டு இருந்த இஷான் கிஷானை தொடக்க வீரராக அறிமுகம் செய்தார் ரோஹித்.

ஆனால் அது எதிர்பார்த்த அளவிற்கு சரியாக இல்லை என்பது தான் உண்மை. அதுமட்டுமின்றி, இந்த ஆண்டு ஐபிஎல் டி-20 2022யில் அதிகபட்ச விளையான 15.25 கோடி விலை கொடுத்து இஷான் கிஷானை வாங்கி தொடக்க வீரராக அறிமுகம் செய்தது மும்பை அணி.

ஆனால் அது தவறான முடிவு என்று பலர் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, 14 போட்டிகளில் விளையாடிய இஷான் கிஷான் 418 ரன்களை அடித்துள்ளார். ஜூன் 9ஆம் தேதி தொடக்க உள்ள தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டி-20 போட்டிகளில் கே.எல்.ராகுல் தான் கேப்டனாக வழிநடத்த போகிறார்.

அதனால் ரோஹித் சர்மா போல இல்லாமல், இவராவது ருதுராஜ் கெய்க்வாட் -க்கு வாய்ப்பு கொடுப்பாரா ?? இல்லையா ?? என்ன செய்ய போகிறது பிசிசிஐ. கிரிக்கெட் ரசிகர்களே..! நீங்க சொல்லுங்க இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான ஐந்து டி-20 போட்டியில் தொடக்க வீரராக இஷான் கிஷான் ஆ? ருதுராஜ் கெய்க்வாட் ஆ?

உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here