இந்திய அணி இப்பொழுது வலுவாக உள்ளது ; இதற்கு பிறகு இந்திய அணியின் மிகப்பெரிய சொத்து இவர் தான் ; முன்னாள் வீரர் சேவாக் உறுதி ;

0

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டிகள் வருகின்ற ஜூன் 9ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதில் தென்னாபிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்று பயணம் மேற்கொள்ள போகிறது.

இருப்பினும் இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு பயணம் செய்து மூன்று டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடினார்கள். அதில் இந்திய அணிக்கு மிகவும் மோசமான நிலை ஏற்பட்டு மோசமான தோல்விகளை சந்தித்துள்ளது தான் உண்மை.

அதனால் இந்த முறை எப்படியாவது இந்திய கிரிக்கெட் அணி டி-20 போட்டிக்கான தொடரை கைப்பற்ற வேண்டுமென்று ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர். சமீபத்தில் தான் இந்திய மற்றும் தென்னப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் விளையாட போகும் இந்திய அணியை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ.

அதில் விராட்கோலி, ரோஹித் , பும்ரா போன்ற வீரர்களுக்கு ஓய்வு கொடுத்த நிலையில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை கொடுத்துள்ளது பிசிசிஐ. இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான விரேந்தர் சேவாக் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியை பற்றி கூறியுள்ளார்.

அதில் “இந்த முறை தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் உம்ரன் மலிக் இந்திய அணியில் இடம்பெற்றது மிகவும் முக்கியமான ஒன்று. அதுமட்டுமின்றி இந்திய அணியின் மிகப்பெரிய சொத்தாக மாற போகிறார். உம்ரன் மலிக் – யிடம் பல திறமை உள்ளது.”

அதில் முக்கியமான ஒன்று தான் அவரது வேகப்பந்து வீச்சு தான். அதனால் அவரை (உம்ரன்) சரியாக பயன்படுத்த வேண்டும். அதிலும் இப்பொழுது கே.எல்.ராகுல் தான் இந்திய அணியை வழிநடத்த போகிறார். அதனால் உம்ரன் மலிக் மிகவும் வேகமாக பவுலிங் செய்வதால் பவர்-ப்ளே -வில் யூஸ் செய்தால் பின்பு இறுதியில் அதிக ரன்களை விட நேரிடலாம்.”

அதனால் சரியான நேரத்தில் சரியாக பயன்படுத்த வேண்டும். டி-20 போட்டிகளில் மட்டுமின்றி டெஸ்ட் போட்டிகளிலும் உம்ரன் மலிக் விளையாட திறமையான வீரர் தான். ஆனால் அவரது வேலை சுமையை சரியாக புரிந்து கொண்டு தான் விளையாட வேண்டும் என்று கூறியுள்ளார் சேவாக்.”

சேவாக் சொன்னது போல உம்ரன் மலிக் பவுலிங் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக இருக்குமா ?? இல்லையா ?? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here