இந்திய அணியை 17 கோடிக்கு விட்டு கொடுத்தாரா கே.எல்.ராகுல் ? கடுப்பில் இருக்கும் ரசிகர்கள் ; முழு விவரம் இதோ ;

கே.எல்.ராகுல் என்ற பெயர் கேட்டால் இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனா ?? அல்லது மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனா என்ற குழப்பம் நிச்சியமாக ரசிகர்கள் இடையே எழும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஏனென்றால் கடந்த மாதம் இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் மற்றும் டி-20 போட்டிகள் நடந்து முடிந்தது.

அதில் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் ஆவது 1 – 2 என்ற கணக்கில் தோல்வியை பெற்றது இந்திய. ஆனால் ஒருநாள் போட்டியில் 0 – 3 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணியை வாஷ் அவுட் செய்தது சவுத் ஆப்பிரிக்கா அணி. அதில் ரோஹித் ஷர்மாவுக்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் அவரால் விளையாட முடியவில்லை.

அதனால் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்று வழிநடத்தினார் கே.எல்.ராகுல். அதில் தேவையில்லாமல் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கி பெரிய அளவில் ரன்களை அடிக்கவில்லை. அதுமட்டுமின்றி, இந்திய அணியை சரியாக வழிநடத்தவும் தெரியவில்லை என்று பல கருத்துக்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.

அதனை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் அவரது பெயர் இடம்பெறவில்லை. அதற்கு காரணம் காயம் தான். இருப்பினும் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரஹானே மற்றும் புஜாரா போன்ற முன்னணி பேட்ஸ்மேன்கள் இல்லை. அதனால் கே.எல்.ராகுலை டெஸ்ட் போட்டியில் வைக்க வேண்டும் என்று பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

ஆனால் கே.எல்.ராகுல் இல்லை எனக்கு காயம் உள்ளது என்று கூறிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் கே.எல்.ராகுல் வருகின்ற ஐபிஎல் டி-20 போட்டியில் விளையாடுவதற்காக பெங்களூரில் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு வரை பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடி கொண்டு வந்துள்ளார் கே.எல்.ராகுல். இருப்பினும் நான் ஏலத்தில் பங்கேற்க போவதாகவும் அவரே அறிவித்தார். இதனை பார்த்த புதிய அணியான லக்னோ சூப்பர் ஜென்ட்ஸ் அணி 17 கோடி அதிகபட்ச விலை கொடுத்து கே.எல்.ராகுலை வாங்கியுள்ளது.

அதனால் தான் இந்திய அணியை விட்டுவிட்டு இந்த மாதிரி செய்துள்ளார் என்று கிரிக்கெட் ரசிகர்கள் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்திய நாட்டில் பல இளம் வீரர்கள் எப்படியாவது இந்திய அணியில் இணைந்து நாட்டுக்காக ஒரு போட்டியில் ஆவது விளையாட வேண்டும் என்பது பலருடைய கனவாக உள்ளது.

ஆனால் கே.எல்.ராகுல் 17 கோடிக்காக இப்படி செய்துள்ளாரா ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது…! என்ன செய்ய போகிறது பிசிசிஐ…! உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள கமெண்ட்ஸ் பக்கத்தில் பதிவு செய்யுங்கள் கிரிக்கெட் ரசிகர்களே..!