சமீப காலமாகவே இந்திய கிரிக்கெட் அணி மற்ற அணிகளுக்கு இடையேயான தொடரில் மட்டும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 1 – 0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் இருந்த காரணத்தால் தொடரையும் வென்றுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியால் ஐசிசி கோப்பையை வெல்லுமா ?
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் தான் முதல் முதலில் கோப்பையை வென்றுள்ளது இந்திய. அதனை அடுத்து தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மட்டும் தான் அனைத்து விதமான ஐசிசி கோப்பையை வென்றுள்ளனர்.
அதனை அடித்து விராட்கோலி மற்றும் இப்பொழுது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியால் ஐசிசி கோப்பையில் வெல்ல முடியாமல் தவித்து வருகிறது இந்திய. கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஆசிய கோப்பை மற்றும் டி-20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி மோசமான நிலையில் வெளியேறியது.
ஒருநாள் உலகக்கோப்பை போட்டி :
உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகள் வருகின்ற அக்டோபர் 5ஆம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. அதில் உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் போட்டி என்றால் இந்திய மற்றும் பாகிஸ்தான் இடையேயான மோதல்.
இந்த போட்டி அக்டோபர் 15ஆம் தேதி அன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ஆனால் அன்று நவராத்திரி இருப்பதால் போட்டியை மாற்றி வைக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனென்றால், இந்திய மற்றும் பாகிஸ்தான் போன்ற முக்கியமான போட்டிகளில் பல நாடுகளில் இருந்து ரசிகர்கள் வருவது இயல்பு. இருப்பினும் அதே நாளில் நவராத்திரி இருப்பதால் பாதுகாப்பு இருக்காது என்றதால் போட்டியை மாற்றிவைக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு இந்தியாவில் ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளதால், இந்திய அணியால் கோப்பையை வெல்ல முடியுமா ? இல்லையா ?