ஐபிஎல் 2023 : ஐபிஎல் போட்டிகள் கடந்த மார்ச் 31ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த லீக் போட்டிகளில் இருந்து குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தேர்வாகியுள்ளது.
இன்று முதல் போட்டியில் ஹர்டிக் பாண்டிய தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத இருக்கின்றனர். அதனால் இரு அணிகளும் கடுமையான பயிற்சி செய்து வருகின்றனர்.
இன்றைக்கு போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டிக்கு முன்னேறிவிடும் என்றதால் விறுவிறுப்பான போட்டியாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, இதுவரை குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான தொடரில் ஒரு முறை கூட சென்னை அணி வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை இந்தியன்ஸ் அணி பெங்களூர் தோல்வியை கொண்டாடியதற்கு இதுதான் காரணம் :
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதி லீக் போட்டி வரை எந்த அணிகள் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என்று பல குழப்பத்தில் இருந்தனர். அதிலும் லீக் சுற்றின் இறுதி போட்டியில் பெங்களூர் மற்றும் குஜராத் அணிகள் மோதின. அதில் பெங்களூர் அணி வென்றால் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும், அப்படி இல்லையென்றால் மும்பை இந்தியன்ஸ் அணி தகுதி பெறும் என்ற நிலையில் தான் இருந்தனர்.
அந்த போட்டியில் கடினமாக விளையாடிய விராட்கோலி சதம் அடித்தார். இருப்பினும் பவுலிங் வலுவாக இல்லாத காரணத்தால் 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வென்றது குஜராத் அணி. அதனால் மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இதையும் படியுங்க : “நிச்சியமாக சென்னை அணியால் குஜராத் அணியை வெல்ல முடியாதா ?; குழப்பத்தில் இருக்கும் ரசிகர்கள் ; காரணம் இதுதான் ;“
இதனை கொண்டாடும் வகையில் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு வீடியோ -வை பகிர்ந்துள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றதால் தான் கொண்டாடியுள்ளனர், பெங்களூர் அணியின் தோல்விக்கு அல்ல என்பது தான் உண்மை. இந்த ஆண்டு தொடக்கத்தில் மோசமான நிலையில் விளையாடி வந்த மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாது என்று தான் அனைவரும் நினைத்தனர்.
ஆனால் இறுதி கட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் விளையாட்டு மிகவும் அற்புதமாக மாறியது. இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணி மட்டும் தான் ஐந்து முறை கோப்பையை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.