சுரேஷ் ரெய்னா போலவே அடுத்த ஆண்டு இவர் CSK அணியில் இருக்க மாட்டார் ; முன்னாள் வீரர் உறுதி ;

பெரும்பாலான இந்திய அணி வீரர்கள் இந்திய அணியின் இருந்து ஓய்வு பெற்றாலும், அதிக ஆண்டுகள் ஐபிஎல் போட்டிகளில் வழக்கமாக கொண்டுள்ளனர்.

ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் கடந்த 2008ஆம் தேதி முதல் சிறப்பாக இந்திய அணியில் அறிமுகம் ஆனது. அதில் இருந்து இதுவரை மொத்தம் 15 ஆண்டுகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. அதில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறையும், சென்னை அணி நான்கு முறையும், கொல்கத்தா அணி இரு முறையும் கோப்பையை வென்றுள்ளனர்.

மகேந்திர சிங் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகிய இருவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கியமான வீரராக திகழ்கின்றனர். கடந்த 2020ஆம் ஆண்டு இருவரும் சர்வதேச போட்டிகளில் இருந்து விலகியுள்ள நிலையில் இன்னும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.

ஆனால் ஐபிஎல் 2021யில் சுரேஷ் ரெய்னா பெரிய அளவில் ரன்களை அடிக்காத காரணத்தால் அவரை தக்கவைக்காமல் வெளியேற்றியது சென்னை அணி. பின்பு சுரேஷ் ரெய்னாவை கடந்த ஐபிஎல் 15வது சீசன் எந்த அணியில் விளையாடவில்லை. அது சென்னை ரசிகர்கள் இடையே மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது.

அதுமட்டுமின்றி, தோனி இன்னும் ஓராண்டு காலத்தில் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் சென்னை அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜாவை நியமனம் செய்தது சென்னை அணி.

ஆனால் சென்னை அணி மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது மட்டுமின்றி, ஆல் ரவுண்டர் ஜடேஜாவின் ஆட்டமும் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. அதனால் மீண்டும் தோனியை கேப்டனாக அறிமுகம் செய்தது சென்னை அணி. பின்னர், ஜடேஜாவுக்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் அணியில் இருந்தே விலகினார்.

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா கூறுகையில் : “எனக்கு தெரிந்து நிச்சியமாக ஜடேஜா அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதே சிரமம் தான். இதற்கு முன்பு தான் சுரேஷ் ரெய்னாவுக்கு நடந்ததை பார்த்தோம்.”

“இது போன்ற விஷயங்கள் சென்னை அணிக்குள் நடப்பது வழக்கம் தான். ரவீந்திர ஜடேஜாவுக்கு காயம் என்று கூறினார்கள், ஆனால் அதனை உறுதிப்படுத்தும் வகையில் சென்னை அணி சரியாக பதில் சொல்லவில்லை. பின்னர் அணியில் இருந்து வெளியேற்றனர்கள்.”

“இதேபோன்ற விஷயம் தான் சென்னை அணியில் சுரேஷ் ரெய்னாவுக்கு நடந்தது. இன்று வரை அவர் அணியில் இடம்பெறவில்லை என்று கூறியுள்ளார் ஆகாஷ் சோப்ரா.”

ஆகாஷ் சோப்ரா சொன்னது போல, அடுத்த ஆண்டு ரவீந்திர ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடமாட்டாரா ?? என்ன செய்ய போகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்.