இதற்கு பிறகும் சூர்யகுமார் யதாவுக்கு வாய்ப்பு இருக்கிறது ? ரோஹித் சர்மா கொடுத்த ஷாக்கிங் பதில் ;

0

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடர் இரு தினங்களுக்கு முன்பு தான் தொடங்கியது. இதுவரை நடந்து முடிந்த போட்டியில் 1 – 1 என்ற கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளனர்.

இரண்டாவது போட்டியின் சுருக்கம் :

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணிக்கு சரியான பார்ட்னெர்ஷிப் அமையாமல் தொடர்ந்து விக்கெட்டை பறிகொடுத்து வந்தனர்.

26 ஓவர் முடிவில் அனைத்து’விக்கெட்டையும் இழந்த இந்திய கிரிக்கெட் அணி வெறும் 117 ரன்களை மட்டுமே அடித்தனர். பின்பு 118 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு வெற்றி சுலபமாக கிடைத்தது.

தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட் மற்றும் மார்ஷ் அதிரடியாக விளையாடி ரன்களை அடித்தனர். அதனால், வெறும் 11 ஓவர் முடிவில் 121 ரன்களை அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலியா.

இந்த ஒருநாள் போட்டிக்கான தொடரில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான சூரியகுமார் யாதவ்-க்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைத்தும் ஒரு ரன்களை கூட அடிக்காமல் விக்கெட்டை இழந்தார்.

அதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையே எதிர்ப்புகள் எழுந்து வருகிறது. அதுமட்டுமின்றி, மீண்டும் சூர்யகுமார் யதாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுமா ? இல்லையா ?? என்று பல கேள்விகள் ரோஹித் சர்மாவிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த ரோஹித் சர்மா கூறுகையில் : “ஸ்ரேயாஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர் மீண்டும் அணிக்கு எப்போது திரும்புவார் என்று தெரியாது. அந்த இடம் இப்பொழுது காலியாக இருக்கிறது. அதனால் சூரியகுமார் யாதவை விளையாட வைத்துள்ளோம்.”

“குறிப்பாக ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் அவரது முழு திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி தொடர்ச்சியாக ரன்களையும் அடித்து வருகிறார். விதியாக விளையாடிய இரு போட்டிகளிலும் ரன்களை அடிக்காமல் விக்கெட்டை இழந்தார்.”

“ஆனால், 8 அல்லது 10 போட்டிகளில் தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைத்தால் நிச்சியமாக ரன்களை அடிப்பார் என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.”

சூரியகுமார் யாதவ இறுதியாக விளையாடிய 10 ஒருநாள் போட்டிகளில் ஒருமுறை கூட அரைசதம் அடித்ததில்லை. சூர்யகுமார் யாதவிக்கு பதிலாக சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் சிறப்பாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதா தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here