ராகுல் டிராவிட் செய்கின்ற மிகப்பெரிய தவறே இதுதான் ; இந்திய தோல்விக்கு காரணமே இதுதான் ;

0

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த போட்டிகளில் 1 – 1 என்ற கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் இருக்கின்றனர்.

அதனால் இன்று மதியம் நடைபெற மூன்றாவது போட்டியில் வெல்லும் அணியே தொடரை கைப்பற்ற போகின்றனர். அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.

இருப்பினும் இரண்டாவது போட்டியில் இந்திய அணிக்கு கிடைத்த தோல்வி என்பது மிகவும் மோசமான ஒன்று. ஆமாம், 50 ஓவர் போட்டியில் வெறும் 117 ரன்களை அடித்த நிலையில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது இந்திய.

ஆனால் , ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி வெறும் 11 ஓவரில் 121 ரன்களை அடித்து இந்திய அணியை வீழ்த்தியுள்ளனர். அதனால் இந்திய அணிக்கு ரசிகர்கள் இடையே விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

தோல்விக்கு என்ன காரணமாக இருக்கும் ? அடிக்கடி அணியில் வீரர்களை மாற்றம் செய்வதா ? ஏனென்றால், தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு தொடர் தொடங்கிவிட்டால் வீரர்கள் மாறுவது சிரமம் தான். முடிந்தவரை ஒரே அணியை வைத்து தான் தோனி விளையாடி வந்துள்ளார்.

ஆனால், இப்பொழுது அப்படி கிடையாது. ஒவ்வொரு போட்டிக்கும் அடிக்கடி வீரர்களை மாற்றம் செய்து வருகிறது இந்திய கிரிக்கெட் அணி. இதனை பற்றி பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான பட் கூறுகையில் ;

” நாங்கள் (பாகிஸ்தான்) இப்பொழுது வெவ்வேறு வீரர்களை வைத்து அணியை தயார் செய்து வருகிறோம். அப்பொழுது தான் உலகக்கோப்பை போட்டிக்கு எந்த ப்ளேயிங் 11 சரியாக இருக்கும் என்று தெரியும்.”

“அதே சமையத்தில் ராகுல் டிராவிட் அன்று சொன்னார், நாங்கள் (இந்திய) எப்பொழுது விதவிதமான வீரர்களை மாற்றி மாற்றி விளையாடுவோம் என்று.”

“முதலில் தொடரை கைப்பற்றுங்கள். ஏனென்றால், அடிக்கடி வீரர்களின் காம்பினேஷன் மாற்றுவது சரியான விஷயம் கிடையாது. முதலில் பேட்டிங் -ல் நடக்கும் பிரச்சனையை சரி செய்யுங்கள். வீரர்களை மாற்றம் செய்ய முடிவு செய்தால் பிரச்சனையே அங்கு தான் ஆரம்பிக்கிறது என்று கூறியுள்ளார் சல்மான் புட்.”

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பாதையை நோக்கி நகர்கிறதா ?? இல்லையா ? உங்கள் கருத்து என்ன ?

மூன்றாவது போட்டியில் விளையாட உத்தேச இந்திய அணியின் விவரம் :

ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல், ஹர்டிக் பாண்டிய, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், முகமத் ஷமி, முகமத் சிராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here