இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இடையேயான டெஸ்ட் போட்டிக்கான தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் முதல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இந்திய கிரிக்கெட் வெற்றியை கைப்பற்றியுள்ளது.
வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான தொடர் போட்டியின் விவரம் :
- ஜூலை 20 (இன்று) – ஜூலை 24 – இரண்டாவது டெஸ்ட் போட்டி
- ஜூலை 27 – முதல் ஒருநாள் போட்டி
- ஜூலை 29 – இரண்டாவது ஒருநாள் போட்டி
- ஆகஸ்ட் 1 – மூன்றாவது ஒருநாள் போட்டி
- ஆகஸ்ட் 3 – முதல் டி-20
- ஆகஸ்ட் 6 – இரண்டாவது டி-20
- ஆகஸ்ட் 8 – மூன்றாவது டி-20
- ஆகஸ்ட் 12 – நான்காவது டி-20
- ஆகஸ்ட் 13 – ஐந்தாவது டி- 20
புதிய கேப்டனுக்கு வாய்ப்பு கிடைக்குமா ? இந்திய கிரிக்கெட் அணியில் ;
ரோஹித் சர்மா, விராட்கோலி, ஷமி போன்ற வீரர்களுக்கு இனிவரும் போட்டிகளில் வாய்ப்பு கிடைக்குமா இல்லையா ? என்ற கேள்விகள் எழுந்துள்ளது. ஏனென்றால், இளம் தொடர்ச்சியாக மூன்று முக்கியமான போட்டிகளில் இந்திய அணி தோல்வியை சந்தித்து வந்துள்ளது. அதுவும் குறிப்பாக ஐசிசி போட்டிகளில்.
அதனால் இளம் வீர்ரகளை கொண்டு அணியை உருவாக்கினால் மட்டுமே இந்திய கிரிக்கெட் அணியால் கோப்பைகளை வெல்ல முடியும் என்று பல கருத்துக்கள் எழுந்து கொண்டே வருகிறது. அதற்கு ஏற்ப இந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி ஏசியன் கேம்ஸ் போட்டிகளில் விளையாட இருக்கின்றனர்.
அதற்கான அணியை சமீபத்தில் தான் பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில் இந்திய அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் இடம்பெற்றுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் சிறப்பாக விளையாடும் ருதுராஜ் ஏன் ? இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட வாய்ப்பு மறுக்கப்படுகிறது ?
ஆமாம், பல போட்டிக்கான தொடரில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறார் ருதுராஜ் கெய்க்வாட். ஆனால் ப்ளேயிங் 11ல் அவருக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டு தான் வருகிறது. தொடக்க வீரராக களமிறங்கி விளையாடி வரும் ருதுராஜ்-க்கு பதிலாக இஷான் கிஷான்-க்கு தான் தொடர்ச்சியாக வாய்ப்புகளை கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று நடைபெற உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியில் ருதுராஜ் கெய்க்வாட்-க்கு வாய்ப்பு கிடைக்குமா ? இல்லையா ? உங்கள் கருத்து என்ன என்பதை மறக்காமல் பதிவு செய்யுங்கள்..!