மூத்த வீரர்களுக்கு நோ சொல்ல போகும் பிசிசிஐ ? பட்டைய கிளப்ப போகும் இந்திய அணியின் இளம் வீரர்கள் இவர்கள் தான் ;

இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியை வெற்றியை கைப்பற்றி 1- 0 என்ற நிலையில் முன்னிலையில் உள்ளது இந்திய. அதனை அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான தொடர் இன்று இரவு நடைபெற இருக்கிறது.

மூத்த வீரர்களுக்கு நோ சொல்ல போகிறதா பிசிசிஐ ?

ஆமாம், சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியால் எந்த விதமான ஐசிசி தொடரிலும் கோப்பைகளை வெல்ல முடியாமல் மோசமான நிலையில் தவித்து வருகிறது இந்திய கிரிக்கெட் அணி. ஆமாம், தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மட்டுமே அனைத்து விதமான ஐசிசி தொடரிலும் கோப்பைகளை வென்றுள்ளனர்.

அதன்பிறகு இந்திய அணியை வழிநடத்திய விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியால் ஐசிசி கோப்பைகளை வெல்ல முடியவில்லை. இருப்பினும் ஒரு முறை ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிவரை முன்னேறியது இந்திய. ஆனால் தோல்வி தான் மிஞ்சியது.

விராட்கோலியை தொடர்ந்து ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு நடந்து முடிந்த டி-20 உலகக்கோப்பை மற்றும் ஆசிய கோப்பை போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தினார் ரோஹித். இருப்பினும் கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது இந்திய.

மூத்த வீரர்களுக்கு நோ சொல்லும் வகையில் , இளம் வீரர்களை கொண்டு இந்திய அணியை உருவாக்க வேண்டுமென்ற எண்ணத்தில் ஏசியன் கேம்ஸ் 2023 போட்டிக்கான இந்திய அணியில் அனைத்தும் இளம் வீரர்கள் மட்டுமே: அணியின் விவரம் :

ருதுராஜ் கெய்க்வாட், யசஸ்வி ஜெய்ஸ்வால், ராகுல் த்ரிபதி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர், ஷ்ஹபஸ் அகமத், ரவி பிஷானி, அவேஷ் கான், அர்ஷதீப் சிங், முகேஷ் சர்மா, ஷிவம் மாவி, ஷிவம் துபே, ப்ரபிசிம்ரான் சிங் போன்ற இளம் வீரர்களை மட்டுமே தேர்வு செய்துள்ளது பிசிசிஐ.

கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு கேள்வி ?

ரோஹித் சர்மா , விராட்கோலி, பும்ரா போன்ற முன்னணி வீரர்கள் அணியில் இருந்தும் இந்திய கிரிக்கெட் அணியால் பல ஆண்டுகளாகவே ஐசிசி தொடரில் கோப்பைகளை வெல்ல முடியவில்லை. அதனால் அவருக்கு பதிலாக இளம் வீரர்களை கொண்டு இந்திய கிரிக்கெட் அணியை உருவாக்கினால் சிறப்பாக இருக்குமா ? இல்லையா ? உங்கள் கருத்து என்ன ?