ரோஹித் , ஹர்டிக் இல்லை ; ஸ்கெட்ச் போட்ட பிசிசிஐ ; அடுத்த கேப்டனே இவர் தான் ; அதிர்ச்சியில் இருக்கும் ரசிகர்கள் ;

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான போட்டிகள் கடந்த ஜூலை 12ஆம் தேதியில் இருந்து நடைபெற தொடங்கியது. அதில் முதல் போட்டியில் 141 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றுள்ளது.

அடுத்த போட்டி வருகின்ற ஜூலை 20ஆம் அன்று இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளதால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, இந்திய அணியில் அறிமுகம ஆன இளம் வீரரான ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்.

தொடக்க வீரராக களமிறங்கிய ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி 171 ரன்களை அடித்துள்ளார். அதனால் இந்திய கிரிக்கெட் அணி வெல்ல முக்கியமான காரணமாக மாறியுள்ளது.

இந்திய அணியில் நடக்க போகும் மிகப்பெரிய மாற்றம் :

கடந்த சில ஆண்டுகளாவே ஐசிசி கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது இந்திய. ஆமாம், தோனிக்கு பிறகு விராட்கோலி தலைமையிலான இந்திய அணி எந்த விதமான ஐசிசி போட்டிகளிலும் கோப்பையை வென்றதில்லை. அதேபோல தான் இப்பொழுது ரோஹித் சர்மா தலைமையிலும் இந்திய அணி ஐசிசி கோப்பையை வெல்ல திணறிக்கொண்டு வருகின்றனர்.

அதனால் விராட்கோலி, ரோஹித் சர்மா, ஷமி, போன்ற வீரர்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு இளம் வீரர்களை கொண்டு விளையாடினால் மட்டுமே உலகக்கோப்பையை வெல்ல முடியும் என்று பலர் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆமாம், ஐபிஎல் போட்டிகளில் அதிரடியாக விளையாடும் பல வீரர்களை இந்திய அணியில் தேர்வு செய்துள்ளது பிசிசிஐ.

ருதுராஜ், ஜெய்ஸ்வால், சுப்மன் கில், உம்ரன் மாலிக் போன்ற வீரர்கள் இந்திய அணியில் அவ்வப்போது வாய்ப்பு கொடுக்கபட்டுவருகிறது பிசிசிஐ. ஆனால் ஆசியன் கேம்ஸ் போட்டிக்கான தொடரில் இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டு பங்கேற்க உள்ளது.

அதில் முக்கியமான இளம் வீரர்களை வைத்து மட்டுமே விளையாட உள்ளது இந்திய. ஆமாம், அதில் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் விளையாட போகிறார். ஐபிஎல் போட்டிகளில் மட்டுமின்றி உள்ளூர் போட்டிகளிலும் அதிரடியாக ரன்களை குவித்துள்ளார் ருதுராஜ். இருப்பினும் ரோஹித் சர்மா போதுமான அளவிற்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்பது தான் உண்மை.

இஷான் கிஷனுக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்கப்பட்டு வரும் நிலையில் ருதுராஜ் ஏன் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்று சமூகவலைத்தளங்களில் கேள்விகள் எழுந்து கொண்டே தான் வருகிறது.

ஆசியா போட்டி ( இந்திய அணியின் விவரம் ):

கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்ஸ்வால், ராகுல் த்ரிபதி, திலக் வர்மா,ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமத், ரவி பிஷோனி, அவேஷ் கான், அர்ஷதீப் சிங், முகேஷ் சர்மா, ஷிவம் மாவி, ஷிவம் துபே, ப்ரப்சிம்ரான் சிங் போன்ற வீரர்கள் விளையாட உள்ளனர்.

ஆசியா போட்டியில் இந்திய அணி வென்றால் நிச்சியமாக ருதுராஜ் கெய்க்வாட் இந்திய கிரிக்கெட் அணியில் நிரந்திரமான இடத்தை மட்டுமின்றி அடுத்த கேப்டனாக விளையாட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. ருதுராஜ் இந்திய அணியின் கேப்டனாக இடம்பெற்றால் சரியாக இருக்குமா ? இல்லையா ? உங்கள் கருத்து என்ன ?