திரும்ப வந்துட்டேனு சொல்லு ; நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய அணியில் விளையாட போகும் வீரர் ;

0

வருகின்ற பிப்ரவரி 9ஆம் தேதி முதல் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியும் மூன்று டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளனர்.

2021 – 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் தவரிசை பட்டியலில் 136 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா அணியும், 99 புள்ளிகளுடன் இந்திய கிரிக்கெட் அணியும், 124 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணியும் உள்ளது. அதனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெல்ல வேண்டிய சூழல் இருக்கிறது இந்திய.

அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பிய ஆல் – ரவுண்டர். சந்தோஷத்தில் இருக்கும் இந்திய ரசிகர்கள்.

இந்திய அணிக்கு திரும்பிய ஆல் – ரவுண்டர் :

கடந்த டி-20 உலகக்கோப்பை போட்டியில் காயம் காரணமாக இந்திய அணியின் ஆல் – ரவுண்டர் ஜடேஜா அணியில் இருந்து விலகினார். அதில் இருந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு மேல் ஓய்வு பெற்றுக்கொண்டு வந்த ஜடேஜா மீண்டும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான தொடரில் விளையாட இருக்கிறார்.

அதனால் இந்திய அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னணி ஆல் – ரவுண்டரான ரவீந்தர ஜடேஜா இதுவரை 60 போட்டிகளில் விளையாடிய ஜடேஜா 2523 ரன்களை அடித்துள்ளார். அதேநேரத்தில், 242 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார்.

ஆல் – ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா சர்வதேச டெஸ்ட் போட்டிக்கான போட்டியில் விளையாடிய 17 அரைசதம் மற்றும் 3 சதம் அடித்துள்ளார். அதுமட்டுமின்றி அதிகபட்சமாக 175* ரன்களை விளாசியுள்ளார்.

இந்திய அணியின் விவரம் :

ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், பாரத், இஷான் கிஷான், சுப்மன் கில், விராட்கோலி, புஜாரா, ஸ்ரேயாஸ் ஐயர், குல்தீப் யாதவ், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஸட் பட்டேல், ரவீந்திர ஜடேஜா, முகமத் ஷமி, உமேஷ் யாதவ், சூர்யகுமார் யாதவ், ஜெயதேவ் உனட்கட் , முகமத் சிராஜ் போன்ற வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here