இந்த சின்ன பையனுக்கு வாய்ப்பு கொடுங்க ; எதிர்காலமே இவங்க தான் ; சேவாக் பேட்டி ;

டி-20 உலகக்கோப்பை போட்டிகள் நேற்று முன்தினம் முதல் நடைபெற்று முடிந்துள்ளது. அதில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்றுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் அணி.

உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியின் நிலை :

இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் இடம்பெற்ற இந்திய கிரிக்கெட் அணி லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். தொடக்கத்தில் இருந்து பேட்டிங் வலுவாக இருந்தாலும் பவுலிங்கில் நம்பிக்கை வைக்கும் அளவிற்கு இல்லை என்பது தான் உண்மை. ஏனென்றால் ரவீந்திர ஜடேஜா, பும்ரா போன்ற முன்னணி வீரர்கள் இல்லாதது இந்திய அணிக்கு பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.

அரையிறுதி போட்டியில் இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. அதில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது இங்கிலாந்து கிரிக்கெட் அணி. அதனால் இந்திய அணியால் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்ற முடியாத அளவிற்க்கு இந்திய கிரிக்கெட் இருக்கிறதா என்று யாரும் எதிர்பார்க்காத வகையில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

அதில் குறிப்பாக ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் பார்ட்னெர்ஷிப், புவனேஸ்வர் குமார், ஷமி போன்ற பவுலர்கள் தான் முக்கியமான காரணம் என்று அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில், இனிவரும் போட்டிகளில் நிச்சியமாக அதிகப்படியான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்ட வேண்டுமென்று தான் கருத்துக்கள் எழுகின்றன.

அதற்கு ஆதரவாக இந்திய அணியின் முன்னாள் வீரரான விரேந்தர சேவாக் கூறியுள்ளார். மேலும் இதனை பற்றி பேசிய சேவாக் கூறுகையில் ; “எனக்கு இந்த பையன் (பிருத்வி ஷாவ்) இந்திய கிரிக்கெட் அணியின் இடம்பெற வேண்டுமென்று நான் ஆசைப்படுகிறேன். எனக்கு தெரிந்து இப்பொழுது இந்திய கிரிக்கெட் அணியின் டி-20 அல்லது ஒருநாள் போட்டிகளில் விளையாடாமல் வருகிறார். அதுமட்டுமின்றி, டெஸ்ட் போட்டியில் விளையாடி ரொம்ப நாள் ஆகிடுச்சு. எனக்கு தெரிந்து நிச்சியமாக கம்பேக் கொடுக்க போகிறார், அதுமட்டுமின்றி அடுத்த ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை போட்டியிலும் இடம்பெறுவார் என்று கூறியுள்ளார் சேவாக்…!”

23 வயதான ப்ரித்வி ஷாவ் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி வருகிறார். இதுவரை 5டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 339 ரன்களையும், 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 189 ரன்களையும் அடித்துள்ளார். ஆனால் ஐபிஎல் போன்ற லீக் போட்டிகளில் மட்டும் 36 போட்டியில் 3084 ரன்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..!

இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவேண்டுமென்றால் எந்த வீரருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டுமென்று நீங்க நினைக்கிறீங்க ?