பும்ரா இடத்தில் இந்த இரண்டு பவுலர்கள் அணியில் உள்ளனர் ; பவுலிங் வலுவாக தான் இருக்கிறது ; முன்னாள் கேப்டன் பேட்டி ;

AsiaCup 2022: இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஆசிய கோப்பை போட்டிகள் இன்று இரவு முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் இந்திய, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஹாங் காங் மற்றும் இலங்கை போன்ற ஆறு அணிகளை கொண்டு விளையாட உள்ளனர்.

இன்றைய முதல் போட்டியில் குரூப் பி பிரிவை சேர்ந்த முகமத் நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும், ஷனாக தலைமையிலான இலங்கை அணியும் மோத உள்ளனர். அதுமட்டுமின்றி நாளை இரவு நடைபெற உள்ள போட்டியில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளனர்.

இன்றைய போட்டியை விட நாளைய போட்டிக்கு தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. சமீபத்தில் தான் ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்க போகும் 15 பேர் கொண்ட இந்திய அணியின் விவரத்தை வெளியிட்டது பிசிசிஐ.

அதில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ரா இடம்பெறாதது அதிர்ச்சியாக இருந்தது. அவருக்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் ஆசிய கோப்பையில் இடம்பெறவில்லை என்று பிசிசிஐ உறுதியாக கூறியுள்ளது. அதனால் இந்திய அணியின் பவுலிங் எப்படி இருக்க போகிறது என்ற பயம் நிச்சியமாக அதிகரித்துள்ளது தான் உண்மை.

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் கேப்டனான திலிப் வெங்ச்சர்க்கார் பும்ரா இல்லாததை பற்றி சில முக்கியமான தகவலை பதிவு செய்துள்ளார். அதில் பும்ரா ஒரு தலைச்சிறந்த பவுலர் தான், கடந்த பல போட்டிகளில் அவரது முழு திறனையும் வெளிப்படுத்தியுள்ளார். இருப்பினும் இந்திய அணியில் பெஞ்ச் வீரர்கள் பலர் திறமையாக தான் விளையாடி வருகின்றனர்.”

“ஐபிஎல் போட்டிகளில் மிகவும் அருமையாக விளையாடி வருகின்றனர். அதனால் பும்ரா இல்லாதது நிச்சியமாக இந்திய அணிக்கு இழப்பாக இருக்காது. பேட்டிங் எப்பொழுதும் இந்திய அணியில் வலுவாக தான் இருக்கிறது. அதிலும் இப்பொழுது ஹர்டிக் பாண்டிய சிறப்பாக விளையாடி வருவதால் இந்திய அணிக்கு நல்ல விஷயம்.”

“அதேபோல பும்ரா இடத்திற்கு இப்பொழுது ஆவேஷ் கான் மற்றும் அர்ஷதீப் சிங் போன்ற சிறப்பான பவுலர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதை நாம் அனைவரும் பார்த்துள்ளோம். அவர்கள் பவுலிங் செய்து வந்த விதம் நிச்சியமாக இந்திய அணிக்கு தேவையான ஒன்று தான். அதனால் இவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் நிச்சியமாக வாய்ப்பை பயன்படுத்துவார்கள் என்று கூறியுள்ளார் திலிப்.”

பும்ரா இந்திய அணியில் இடம்பெறாதது பின்னடைவாக இருக்குமா ?? அவருக்கு பதிலாக யார் அணியில் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் என்று உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!