இந்திய அணியின் ப்ளேயிங் 11 இதுதான் ; பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள போகும் இந்திய வீரர்களில் பட்டியல் லீக் ஆகிவிட்டது ;

ஆசிய கோப்பை போட்டிகள் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்க உள்ளது. அதில் முகமத் நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும், ஷனாக தலைமையிலான இலங்கை அணியும் மோத உள்ளனர். இந்த இரு அணிகளும் குரூப் பி பிரிவை சேர்ந்த வீரர்கள். இந்த ஆசியா கோப்பை போட்டியில் மொத்தம் 6 அணிகள் விளையாட உள்ளனர்.

அதில் இந்திய, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, ஹாங் காங் மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடம்பெற்றுள்ளனர். இன்று தொடங்கிய போட்டி செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதனால் விறுவிறுப்பான தொடருக்கு பஞ்சம் இருக்காது. அதுமட்டுமின்றி நாளை நடைபெற உள்ள போட்டிக்கு தான் உலக கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

ஆமாம், நாளை இரவு நடைபெற உள்ள போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோத உள்ளனர். கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியை வீழ்த்தியது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி.

15 பேர் கொண்ட இந்திய அணி ஆசிய கோப்பை போட்டிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் அதில் எந்த 11 வீரர்கள் இடம்பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது தான் உண்மை. இதனை பற்றி பலர் அவரவர் கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

நேற்று மதியம் இதற்கு முற்றுப்புள்ளி வகையில் இன்ஸ்டகிராம் பக்கத்தில் 10 புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அதில் 11 பேர் கொண்ட சரியாக வரிசை படுத்தி பதிவு செய்தது ரசிகர்களை ஈர்த்துள்ளது. அதில் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட்கோலி, சூரியகுமார் யாதவ், ஹர்டிக் பாண்டிய, ரிஷாப் பண்ட், தினேஷ் கார்த்திக், புவனேஸ்வர் குமார், யுஸ்வேந்திர சஹால், ஆவேஷ் கான் மற்றும் அர்ஷதீப் சிங் இடம்பெற்றுள்ளனர்.

ஆனால் ரவீந்திர ஜடேஜா இடம்பெறாதது அதிர்ச்சியாக தான் இருக்கிறது. அப்படி ரவீந்திர ஜடேஜா இடம்பெற்றால் நிச்சியமாக தினேஷ் கார்த்திக் அணியில் இருந்து வெளியேற்ற அதிக வாய்ப்புகள் உள்ளது. ஏனென்றால் நிச்சியமாக மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய அணிக்கு தேவையான விஷயம்.

இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் எந்த எந்த வீரர்கள் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!