இந்திய அணியில் இவர் மட்டும் ரன்களை அடிக்க கூடாது ; அடிக்க தொடங்கினால் நிறுத்த முடியாது ; பாகிஸ்தான் வீரர் சதாப் கான் ஓபன் டாக்

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த ஆசிய கோப்பைக்கான தொடர் ஒருவழியாக இன்று இரவு முதல் நடைபெற உள்ளது. இன்றைய முதல் போட்டியில் முகமத் நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும், ஷனாக தலைமையிலான இலங்கை அணியும் மோத உள்ளனர்.

இந்த முறை ஆசிய கோப்பையில் பாகிஸ்தான், இந்திய, இலங்கை, ஆப்கானிஸ்தான், ஹாங் காங் மற்றும் பங்களாதேஷ் போன்ற ஆறு அணிகளை கொண்டு விளையாட உள்ளனர். சமீபத்தில் தான் ஆசிய கோப்பையில் பங்கேற்க போகும் 15 பேர் கொண்ட இந்திய அணியின் விவரத்தை வெளியிட்டது பிசிசிஐ.

இந்திய அணியின் விவரம் :

ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட்கோலி, சூர்யாகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷாப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்டிக் பாண்டிய, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சஹால், ரவி பிஷானி, புவனேஸ்வர் குமார், அர்ஷதீப் சிங், ஆவேஷ் கான் போன்ற வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

விராட்கோலி கம்பேக் கொடுப்பாரா ?

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இந்திய கிரிக்கெட் அணி அனைத்து விதமான தொடர் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறது. ஆனால் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட்கோலி தொடர்ந்து எந்த போட்டிகளிலும் பெரிய அளவில் ரன்களை அடிப்பதில்லை. அதுமட்டுமின்றி கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் திணறிக்கொண்டு வருகிறார் விராட்.

விராட்கோலி நிச்சயமாக ஆசிய கோப்பை 2022 போட்டிகளில் கம்பேக் கொடுப்பார் என்று பலர் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆமாம், அதேபோல தான் பாகிஸ்தான் வீரர் ஷதாப் கான் சில முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார். ஆசிய கோப்பையில் தீவிரமாக அனைத்து அணிகளும் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

அப்பொழுது பாகிஸ்தான் வீரரிடம் சில முக்கியமான கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் விராட்கோலியை பற்றியும் கேலிகள் எழுந்தன. அதற்கு பதிலளித்த பாகிஸ்தான் வீரர் சதாப் கான் கூறுகையில் ; “எனக்கு தெரிந்து பல முன்னாள் வீரர்களுக்கு விராட்கோலி எப்படி விளையாடுவார் என்பதை பற்றி தெரியவில்லை. அதுமட்டுமின்றி விராட்கோலி விளையாடும் போது பயத்தை ஏற்படுத்துவதில்லை என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.”

“கிரிக்கெட் போட்டியில் பலருக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார் விராட்கோலி. அவரது ரன்கள் அவர் யார் என்பதை சொல்லும். அவர் எப்பொழுது பேட்டிங் செய்ய வந்தாலும், நிச்சியமாக பயம் இருக்கும், ஏனென்றால் ஆவது அதிரடியான ஆட்டம் அனைவருக்கும் தெரியும். அதனால் எங்கள் அணியை பொறுத்த வரை அதிக நேரம் அவரை விளையாட விட கூடாது என்பது தான்.”

“எனக்கும் அவரது கம்பேக் பார்க்க ஆசை தான். அதனால் நான் நிச்சியமாக அவர் சிறப்பாக விளையாட வேண்டுமென்று நான் பிராத்தனை செய்வேன். இப்பொழுதும் கூட அவர் சிறப்பாக தான் பயிற்சியில் விளையாடி வருகிறார். ஆனால் பார்ப்பவர்களுக்கு அவர் போர்மில் இல்லை என்பது போல தான் தெரியும். எனக்கு அவர் (விராட்கோலி) சதம் அடிக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்.”

“ஆனால் அந்த சதம் எங்கள் அணியுடன் இல்லாமல் , மற்ற அணிகளுடன் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார் சதாப் கான்.” நாளை இரவு 7:30 மணியளவில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோத உள்ளனர். அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகிறார்.