முதல் போட்டியில் செய்த தவறை இதில் செய்யமாட்டோம் ; இந்திய அணியின் கேப்டனான கே.எல்.ராகுல் உறுதி ;

0

இன்றைய இரண்டாவது ஒருநாள் போட்டியில் தெம்பா பாவுமா தலைமையிலான சவுத் ஆப்பிரிக்கா அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும்மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய போவதாக கே.எல்.ராகுல் கூறினார்.

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 287 ரன்களை அடித்துள்ளது இந்திய. அதில் கே.எல்.ராகுல் 55, ஷிகர் தவான் 29, விராட்கோலி 0, ரிஷாப் பண்ட் 85, ஷ்ரேயாஸ் ஐயர் 11, வெங்கடேஷ் ஐயர் 22, ஷர்டுல் தாகூர் 40 மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் 25 ரன்களை அடித்துள்ளனர்.

இப்பொழுது தென்னாபிரிக்கா அணி 288 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது சவுத் ஆப்பிரிக்கா அணி. தென்னாபிரிக்கா அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனான ஜன்னிமேன் மலன் 60 மற்றும் டி-காக் 78 ரன்களை அடித்துள்ளனர்.

அதுவும் ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் 100க்கு மேற்பட்ட ரன்களை அடித்தது இந்திய அணிக்கு ஆபத்து தான். ஆமாம் .. முதல் போட்டியில் பாவுமா மற்றும் டூஸ்ஸன் ஆகிய இருவரும் சதம் அடித்துள்ளனர். அதனால் வெற்றி வாய்ப்பு இந்திய அணியை விட தென்னாபிரிக்கா அணிக்கு தான் அதிகம் உள்ளது.

ஒருவேளை இந்திய அணியின் பவுலர்கள் தொடர்ந்து விக்கெட்டை கைப்பற்றினால் மட்டுமே தென்னாபிரிக்கா அணியை வெல்ல முடியும். ஆனால் இதுவரை நடந்த போட்டியை வைத்து பார்த்தால் அது சாத்தியம் இல்லாதது போல தான் தெரிகிறது.

டாஸ் வென்ற போது பேசிய இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் ; இந்த இரண்டாவது எங்கள் அணிக்கு மிகவும் முக்கியமான போட்டியாகும். அதனால் இந்த முறை அதிக ரன்களை அடிக்க வேண்டும் என்பது தான் ஒரே எண்ணம். கடந்த முதல் ஒருநாள் போட்டியில் மிடில் ஆர்டர் எங்கள் அணிக்கு சரியாக அமையவில்லை.

அந்த தவறை நிச்சியமாக இந்த முறை செய்யமாட்டோம். அதில் செய்த தவறை கற்றுக்கொண்டு இப்பொழுது அதனை சரி செய்துள்ளேன் என்று கூறியுள்ளார் கே.எல்.ராகுல். 1 – 0 என்ற கணக்கில் சவுத் ஆப்பிரிக்கா அணி முன்னிலையில் உள்ளது. அதனால் இந்த இரண்டாவது போட்டியில் ஆவது இந்திய அணி வெல்லுமா ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here