மும்பை இந்தியன்ஸ் அணியில் இவர்கள் மூன்று பேரை எதற்கு  உலகக்கோப்பை போட்டிக்கு தேர்வு செய்தது பிசிசிஐ… ! இந்திய அணியில் மாற்றம் வருமோ ??

ஐபிஎல் 2021 போட்டிகள் இப்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து ஐசிசி உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது. அதுவும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் என்று பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விறுவிறுப்பான போட்டிக்கு எந்த பஞ்சமும் இருக்காது.

வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி முதல் உலகக்கோப்பைக்கான போட்டிகள் நடைபெற உள்ளது. சமீபத்தில் தான் உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ. அதில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் விவரம் :

விராட்கோலி, ரோஹித் சர்மா, இஷான் கிஷான், ஹார்டிக் பாண்டிய, சூரியகுமார் யாதவ், ரிஷாப் பண்ட், அக்சர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், புவனேஸ்வர் குமார், பும்ரா, முகமது ஷமி, வருண் சக்கரவத்தி, ராகுல் சஹார் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

பிசிசிஐ அணியை அறிவித்த பிறகு தான் ஐபிஎல் 2021 போட்டிகள் இரண்டாம் பாகம் தொடங்கியுள்ளது. அதில் சூரியகுமார் யாதவ், இஷான் கிஷான் மற்றும் ராகுல் சஹார் போன்ற மூவரின் ஆட்டம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும்,.

அதிலும் குறிப்பாக இஷான் கிஷான் மற்றும் ராகுல் சஹார் ஆகிய இருவரின் ஆட்டம் சரியாக இல்லை என்ற காரணத்தால் அவர்களை ப்ளேயிங் 11 ல் இருந்து வெளியேற்றியுள்ளார் ரோஹித் சர்மா. இஷான் கிஷான் இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 107 ரன்களை மட்டுமே அடித்துள்ளார்.

அதேபோல, இதுவரை 11 போட்டிகளில்  பவுலிங் செய்து 13 விக்கெட்டை மட்டுமே கைப்பற்றியுள்ளார். சூரியகுமார் யாதவ் 12 போட்டிகளில் விளையாடி 222 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். ஆனால் ருதுராஜ் கெய்க்வாட் 508, சஞ்சு சாம்சன் 480, தவான் 462 ரன்களை அடித்துள்ளனர்.

அனால் இவர்களை எல்லாம் விட்டுவிட்டு ஏன் சூரியகுமார் யாதவ், இஷான் கிஷான் மற்றும் ராகுல் சஹார் இடம்பெற்றுள்ளனர் என்று கேள்விகள் சமூகவலைத்தளங்களில் எழுந்து வருகிறது…! இந்திய அணியில் மீண்டும் மாற்றம் ஏற்படுமா இல்லையா ??