வீடியோ ; இந்த catch மட்டும் பிடித்திருந்தால் CSK அணிக்கு வெற்றி கிடைத்திருக்கும்…! கடுப்பான ஜடேஜா மற்றும் ப்ராவோ

நேற்று நடந்த 29வது போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா மைதானத்தில் நடைபெற்றது போட்டியில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை அணியம், ரஷீத் கான் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற குஜராத் பவுலிங்கை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு எதிர்பாராத விதமாக ருதுராஜ் கெய்க்வாட் இன்றைய போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் இந்த முறை ராபின் உத்தப்பா தவறிவிட்டார். இரு ஓவர் வரை விளையாடிய சென்னை அணி 5 விக்கெட்டை இழந்த நிலையில் 169 ரன்களை அடித்தனர்.

அதில் ருதுராஜ் 73, மொயின் அலி 3, ராபின் உத்தப்பா 1, ராயுடு 46, ஷிவம் துபே 19, ரவீந்திர ஜடேஜா 22 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது குஜராத் டைட்டன்ஸ் அணி. ஆனால் சிறப்பாக தொடக்க ஆட்டம் அமையவில்லை.

ஏனென்றால் சென்னை அணியின் அசத்தலான பவுலிங்கில் முதல் ஐந்து விக்கெட்டை விரைவாக கைப்பற்றியது சென்னை. ஆனால் டேவிட் மில்லரின் ஆட்டம் மிகவும் அதிரடியாக இருந்த காரணத்தால் சென்னை அணிக்கு ஆபத்தாக முடிந்தது தான் உண்மை. ஏனென்றால் மில்லர் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் 94 ரன்களை அடித்துள்ளார்.

அதனால் 19.5 ஓவர் முடிவில் 170 ரன்களை அடித்து சென்னை அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது குஜராத் அணி. சென்னை அணியின் தோல்விக்கு கிறிஸ் ஜோர்டான் தான் காரணம் என்று பலர் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால் 3.5 ஓவர் பவுலிங் செய்து 58 ரன்களை கொடுத்துள்ளார்.

இதுவும் ஒரு காரணம் தான், ஆனால் ஷிவம் துபே ஒரு Catch மிஸ் செய்ததை யாரும் மறந்துவிட முடியாது. 16.2 ஓவரில் பவுலிங் செய்த ப்ராவோவின் பந்து வீச்சை எதிர்கொண்டார் மில்லர். அப்பொழுது அடித்த மில்லர், அது சரியாக ஷிவம் துபே நிற்கும் இடத்திற்கு முன்பு அது விழுந்தது.

ஷிவம் துபே நினைத்திருந்தால் நிச்சியமாக அதனை ஓடி வந்து பிடித்திருக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை. அதனை தவறவிட்ட உடன் ப்ராவோ மற்றும் கேப்டன் ரவீந்திர ஜடேஜா கடுப்பான வீடியோ காட்சி இப்பொழுது இணையத்தை கலக்கி வருகிறது. ஒருவேளை இந்த CATCH மட்டும் ஷிவம் துபே பிடித்திருந்தால் நிச்சியமாக சென்னை அணிக்கு வெற்றி பெற்றிருக்க அதிக வாய்ப்பு இருந்திருக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை.

கிரிக்கெட் ரசிகர்களே நீங்க சொல்லுங்க ஷிவம் துபே விட்ட இந்த கேட்ச் தான் போட்டியின் திருப்பு முனையாக மாறியதா ?? இல்லையா ?? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!