தோல்விக்கு இவர் மட்டுமே தான் காரணம் : ஒன்னும் பண்ண முடியாது ; ரவீந்திர ஜடேஜா பேட்டி

நேற்று புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ரஷீத் கான் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற குஜராத் அணி வழக்கம் போல பவுலிங்கை தேர்வு செய்தது குஜராத்.

அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு ருத்ராஜ் கெய்க்வாட் சிறப்பாக விளையாடி அதிக ரன்களை அடித்தார். அதனால் 20ஓவர் முடிவில் 169 ரன்களை அடித்தது சென்னை அணி. அதில் ருத்ராஜ் 73, உத்தப்ப 3,மொயின் அலி 1, ராயுடு 46, ஷிவம் துபே 19, ரவீந்திர ஜடேஜா 22 ரன்களை அடித்தனர்.

பின்பு 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி. தொடக்கத்தில் ஐந்து விக்கெட்டை விரைவாக இழந்த குஜராத் அணிக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டது. ஆனால் மில்லர் ஆடிய அதிரடியான ஆட்டத்தால் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு வெற்றி கிடைத்தது தான் உண்மை.

இறுதிவரை போராடிய குஜராத் அணி ஒரு பந்து மீதமுள்ள நிலையில் 7 விக்கெட்டை இழந்து 170 ரன்களை அடித்து வெற்றியை கைப்பற்றியுள்ளது. அதில் அதிகபட்சமாக மில்லர் 94 ரன்களை ஆட்டம் இழக்காமல் விளையாடியுள்ளார். இதனையடுத்து தோல்வியை சந்தித்த சென்னை அணி 9வது இடத்தை தக்கவைத்துக்கொண்டு வருகிறது.

போட்டி முடிந்த பிறகு பேசிய ரவீந்திர ஜடேஜா கூறுகையில் ; “நாங்கள் பவுலிங் செய்யும்போது சிறப்பாக தான் தொடங்கினோம். அதுவும் முதல் 6 ஓவரில் எங்கள் பவுலிங் மிகவும் அருமையாக இருந்தது. ஆனால் நாங்கள் பிளான் செய்த மாதிரி இறுதியாக 6 ஓவர் பவுலிங் செய்யவில்லை. “

“கிறிஸ் ஜோர்டான் யாக்கர் பவுலிங் வீச முயற்சி செய்தார். ஆனால் அது நடக்கவில்லை. ஒருவேளை அதனை சரியாக செய்திருந்தால் வெற்றி கிடைத்திருக்க அதிக வாய்ப்பு உள்ளது. இருந்தாலும் பரவாயில்லை, இதுதான் கிரிக்கெட் போட்டியின் அழகே என்று கூறியுள்ளார் ரவீந்திர ஜடேஜா.”

கிறிஸ் ஜோர்டான் பவுலிங் செய்த 3.5 ஒவரில் 58 ரன்களை கொடுத்துள்ளார். ஒருவேளை இவர் மட்டும் ரன்களை கொடுக்காமல் கட்டுப்படுத்திருந்தால் நிச்சியமாக சென்னைய அணிக்கு தோல்வியே இருந்திருக்காது. சுலபமாக வெற்றியை கைப்பற்ற வேண்டிய போட்டியில் சென்னை அணி தோல்வியை சந்தித்தது மிகவும் அதிர்ச்சியாக தான் உள்ளது.

சென்னை அணிக்கு இந்த ஆண்டு ஐபிஎல் டி-20 2022யில் ப்ளே – ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு இருக்குமா ?? இல்லையா ?? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்…!