வீடியோ; அம்பதி ராயுடு வால் தப்பித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. காரணம் இதோ!!
14 வது ஐபிஎல் 2020 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.முதலில் பேட்டிங் இறங்கிய வார்னர் மற்றும் பேர்ஸ்டோ நல்ல ஒரு தொடக்க ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
ஏனென்றால் பரிஸ்டாவ் டக் அவுட் ஆகிவிட்டார். அதன்பின்னர் இறங்கிய கேன் வில்லியம்சன் மற்றும் வார்னர் நல்ல ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.அப்போது எதிர்பாராத விதமாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் பேட்ஸ்மேன் வில்லியம்சன் ரன் அவுட் ஆகிவிட்டார். அந்த ரன் அவுட் செய்தவர் ராயுடு தான்.
முதல் போட்டியில் மும்பைக்கு எதிரான போட்டியில் நல்ல ரன்களை எடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வெற்றிக்கு கொண்டு சென்ற அம்பதி ராயுடு அதன்பிறகு காயம் காரணமாக அடுத்த வந்த 2 போட்டியில் விளையாடவில்லை.
அந்த 2 போட்டிகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை சந்தித்துள்ளது. அதன் காரணமாக அம்பதிராயுடு அணியில் இருக்க வேண்டும் என்று பல ரசிகர்கள் கூறி வந்த நிலையில் இப்பொழுது சன்ரைசர்ஸ் எதிரான போட்டியில் களம் இறங்கியுள்ளார் அம்பதி ராயுடு.
சென்னை அணிக்கு இவர் நல்ல ஒரு பேட்ஸ்மேன் ஆக இருப்பர் என்பதில் சந்தேகமில்லை. சுரேஷ் ரெய்னா அவரது குடும்ப பிரச்சனை காரணமாக இந்தியா திரும்பி சென்றுவிட்டார். அதனால் நல்ல ஒரு பேட்டிங் சென்னை அணிக்கு இருக்காது என்று பல கிரிக்கெட் வீரர்கள் கூறி வந்த நிலையில் அந்த இடத்தை அம்பதி ராயுடு பூர்த்தி செய்வார் என்று எல்லோராலும் எதிர்பார்க்க பட்டது.
அதே மாதிரி முதல் போட்டியில் மும்பை அணியை எதிர் கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அம்பதி ராயுடு நல்ல ஒரு தொடக்க ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அம்பதி ராயுடு வால் தப்பித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி… காரணம் இதோ!!
ஒருவேலை வில்லியம்சன் அவுட் ஆகவில்லை என்றால் இன்னும் அதிக ரன்களை எடுத்திருக்க முடியும் அதனை ராயுடு நிறுத்திவிட்டார் என்றே சொல்லலாம்.