ஐபிஎல் 2020: ஐபிஎல் போட்டி கடந்த செப்டம்பர் மாதம் 19ம் தேதி ஆரம்பித்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று தோனி தலைமையிலானசென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.
முதலில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய வார்னர் மட்டும் ஜானி பாரிஸ்டாவ் ஆகிய இருவரும் நல்ல ஒரு ஆட்டத்தை ஏற்படுத்துவார்கள் என்று பலரும் நினைத்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக ஜானி பேர்ஸ்டோ டக் (0) அவுட் ஆகி விட்டார்.
அதன் பின்னர் களமிறங்கிய மணிஷ் பண்டே நல்ல ஒரு தொடக்கத்தை ஏற்படுத்தினார் 21 பந்தில் 5 பவுண்டரிகளை விளாசி 29 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி விட்டார்.
28 பந்தில் 20 ரன்கள் எடுத்த நிலையில் இருந்த வார்னர் அடித்து ஆடலாம் என்று இறங்கி அடித்தார் அப்பொழுது எதிர்பாராதவிதமாக சென்னை அணியின் பேட்ஸ்மேன் டுப்லஸ்ஸிஸ் பவுண்டரி லைனில் இருந்து தாவிக்குதித்து கேட்ச் பிடித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் அனைவரும் வயதாகி விட்டார்கள் என்று பலர் கேலி செய்த நிலையில் வயதானாலும் நல்ல ஒரு வீரர் என்று நிரூபித்துக் கொண்டே இருக்கின்றனர். இதனை பார்த்த சென்னை ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.