ஐபிஎல் 2022 : ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை வெற்றிகரமாக 56 போட்டிகள் வெற்றிகரமாக நடந்து மமுடிந்துள்ளது. இன்னும் சில போட்டிகள் மட்டுமே மீதமுள்ளது ப்ளே – ஆஃப் சுற்றுக்கு. அதுமட்டுமின்றி இறுதி போட்டி மே 29ஆம் தேதி அன்று அஹமதாபாத்-ல் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் ;
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த ஆண்டு மிகவும் மோசமான ஆண்டாக மாறியுள்ளது தான் உண்மை. இதுவரை 14 சீசன்களில் மொத்தம் 4 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது சென்னை. இருப்பினும், ஆனால் சென்னை அணி 2020ஆம் ஆண்டு மற்றும் இந்த ஆண்டு (2022) ஆண்டுகளோ மட்டுமே சென்னை அணி ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் போனது.
ஐபிஎல் 2022 : சிஎஸ்கே
இந்த ஆண்டு சென்னை அணி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதுவரை 11 போட்டிகளில் வெறும் 4 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது சென்னை. அதனால் புள்ளிபட்டியலில் 11வது இடத்தில் உள்ளது. இருப்பினும் சென்னை அணி ப்ளே – ஆஃப் சுற்றுக்கு ஒருசில வாய்ப்புகள் உள்ளது.
என்ன நடந்தால் சென்னை அணிக்கு ப்ளே – ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு இருக்கும் ?
சென்னை அணிக்கு இன்னும் 3 போட்டிகள் மட்டுமே மிதமுள்ளது. அதில் அனைத்திலும் வெற்றிபெற்றால் கூட சென்னை அணிக்கு 14 புள்ளிகள் மட்டுமே கிடைக்கும். அதனால் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற குறைவான வாய்ப்புகள் மட்டுமே உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இனிவரும் போட்டிகளில் ஏதாவது ஒரு போட்டியில் இரு அணிகள் வென்றுவிட்டால் சென்னை அணிக்கு வாய்ப்பே இல்லை.
ஆனால் மீண்டும் சென்னை அணியை ஜடேஜாவுக்கு பிறகு மகேந்திர சிங் தோனி சிறப்பாக வழிநடத்தி வருகிறார். இரு தினங்களுக்கு முன்பு டெல்லி கேபிட்டல்ஸ் அணியை 91 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. அதனால் நிச்சியமாக இன்னும் சில வாய்ப்புகள் உள்ளது தான் உண்மை.
கிரிக்கெட் ரசிகர்களே..! நீங்க சொல்லுங்க..இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே – ஆஃப் சுற்றுக்கு வாய்ப்புகள் இருக்குமா ?? இல்லையா ?? உங்கள் கருத்தை மறக்காமல் ,கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!