விராட்கோலி இவர் மேல் அதிக நம்பிக்கை வைத்துள்ளார் ; பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் பட்டைய கிளப்புவார் ;

0

இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டிகளில் மூன்று டி-20 போட்டிக்கான தொடரில் இந்திய கிரிக்கெட் அணியும், ஒருநாள் போட்டிக்கான தொடரில் நியூஸிலாந்து அணியும் வென்றுள்ளது.

இதனை அடுத்து இன்னும் மூன்று நாட்களில் பங்களாதேஷ் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு எதிரான தொடர் போட்டிகள் நடைபெற உள்ளது. அதற்க்கான அணியை சமீபத்தில் தான் பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில் ரோஹித் சர்மா, விராட்கோலி, ஷர்டுல் தாகூர்,போன்ற முன்னணி வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியில் தொடரும் சர்ச்சை :

சமீப காலமாகவே இந்திய அணியில் விளையாடி வரும் ரிஷாப் பண்ட் -ன் பங்களிப்பு மிகவும் மோசமான நிலையில் தன இருக்கிறது. டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்தும் அதனை சரியாக பயன்படுத்தாமல் வருகிறார் ரிஷாப். அதனால் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் என்று அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல தான் விராட்கோலியின் பயிற்சியாளரான சர்மா சில முக்கியமான கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அதில் “இப்பொழுது ரிஷாப் பண்ட் விளையாடி வரும் போட்டி உண்மையிலும் ஒத்துக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. ஆனால் இந்திய அணியின் நம்பிக்கையான வீரராக தான் விளையாடி வருகிறார். ஆனால், விராட்கோலி கேப்டனாக இருந்த நேரத்தில் ரிஷாப் பண்ட் மேல் அதிகப்படியான நம்பிக்கை எழுந்தது.”

“அதன்பிறகு கூட தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் ரிஷாப் பண்ட், ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் மோசமான நிலையில் விளையாடி வருகிறார். எனக்கு தெரிந்து போர்மில் இல்ல ரிஷாப் பண்ட் உள்ளுர் போட்டிகளில் விளையாடி கம்பேக் கொடுக்கலாம், அதில் எந்த தவறும் கிடையாது என்று கூறியுள்ளார் பயிற்சியாளர் சர்மா.”

ரிஷாப் பண்ட்-ன் புள்ளி விவரம் இதோ :

டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் ரிஷாப் பண்ட் இறுதியாக விளையாடிய 10 டெஸ்ட் போட்டிகளில் ; 146, 39, 50, 96, 27, 100, 17, 8, 34, ரன்களை அடித்துள்ளார். அதே சமையத்தில் ஒருநாள் போட்டிக்கான தொடரில் : 10, 0, 15, 125, 0, 0, 56, 18, 11 ரன்களை மட்டுமே அடித்துள்ளார்.

இதே நிலைமை பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் தொடர்ந்தால் நிச்சியமாக ரிஷாப் பண்ட் -க்கு சில போட்டிகளில் இருந்து ஓய்வு கொடுக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் நிச்சியமாக ட்விட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்ப்பு எதிர்பாராத வகையில் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here