இந்தியாவில் இவங்க இருவருடைய பவுலிங் மிரட்டலாக இருந்தது ; தோல்வி தான் என்று நினைத்தோம் ; லிண்டன் தாஸ் ஓபன் டாக் ;

0

நேற்று முன்தினம் ஸ்ரீ பங்களா மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் லிட்டன் தாஸ் தலைமையிலான பங்களாதேஷ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் மோதின.

அதில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பவுலிங்கை தேர்வு செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு சரியாக தொடக்க ஆட்டம் ஏற்படவில்லை. தொடர்ந்து விக்கெட்டை இழந்து கொண்டே சென்ற இந்திய அணியால் ரன்களையும் அடிக்க முடியாமல் போய்விட்டது.

ஆனால் மிடில் ஆர்டரில் கே.எல்.ராகுலின் ஆட்டம் வெறித்தனமாக இருந்ததால் இந்திய அணிக்கு ரன்கள் சேர்ந்தன. இறுதியாக 41.2 ஓவர் முடியும் வரை போராடிய இந்திய கிரிக்கெட் அணி 10 விக்கெட்டை இழந்த நிலையில் 186 ரன்களை அடித்தனர். அதில் ரோஹித் சர்மா 27, ஷிகர் தவான் 7, விராட்கோலி 9, ஸ்ரேயாஸ் ஐயர் 24, கே.எல்.ராகுல் 73, வாஷிங்டன் சுந்தர் 19, ஷர்டுல் தாகூர் 2 ரன்களை அடித்துள்ளனர்.

பின்பு 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பங்களாதேஷ் அணி. இந்திய அணியின் கடுமையான பந்து வீச்சால் முதலில் சற்று தயக்கத்துடன் விளையாடிய பங்களாதேஷ் அணி விக்கெட்டை தொடர்ந்து இழந்து கொண்டே வந்தனர். கிட்டத்தட்ட 40வது ஓவரில் 9 விக்கெட்டையும் இழந்தது பங்களாதேஷ் அணி. ஆனால் மெஹிடி ஹசன் மிராஸ் விளையாடிய நம்பிக்கையான ஆட்டத்தால் 46 ஓவர் முடிவில் 187 ரன்களை அடித்த பங்களாதேஷ் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.

அதனால் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறதுபங்களாதேஷ் அணி. இன்னும் மீதமுள்ள இரு போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி வென்றால் மட்டுமே தொடரை கைப்பற்ற முடியும்..!

சமீபத்தில் பேட்டி அளித்த பங்களாதேஷ் அணியின் கேப்டனான லிட்டன் தாஸ் கூறுகையில் : “ரொம்ப சந்தோசமாக தான் இருக்கிறது இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வென்றது. உண்மையிலும் நான் ஒரு பதட்டத்துடன் தான் அமர்ந்து கொண்டு இருந்தேன். ஆனால் இறுதியாக 7 ஓவரில் மெஹிடி விளையாடிய ஆட்டத்தை ரசித்து கொண்டு இருந்தேன். இருந்தாலும் இந்திய அணியின் பவுலர்கள் ஷர்டுல் தாகூர் மற்றும் முகமத் சிராஜ் ஆகிய இருவரும் சிறப்பாக பவுலிங் செய்தனர். சொல்ல போனால் அவர்களால் போட்டி மாறிவிடும் என்று பயந்தேன்.”

“ஆனால் நானும் (லிட்டன் தாஸ்) பேட்டிங் செய்து கொண்டு இருந்த நேரத்தில் நிச்சியமாக இந்த இலக்கை அடித்துவிட முடியும் என்று தான் நினைத்தேன். ஆனால் நாங்க இருவரும் ஆட்டம் இழந்தது கடுமையான நிலைமைக்கு தள்ளியது. ஆனால் மெஹிடி அதனை மாற்றிவிட்டார். அதுமட்டுமின்றி, இந்திய கிரிக்கெட் அணி பவுலிங் சிறப்பாக தான் செய்தார்கள் என்று லிட்டன் தாஸ் கூறியுள்ளார்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here