இரு முக்கியமான வீரர்கள் இல்லாமல் டி-20 உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்க போகும் இங்கிலாந்து அணி இதுதான் ; அதிர்ச்சியில் ரசிகர்கள் ;

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் டி-20 உலகக்கோப்பை போட்டிகள் இந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளதாக ஐசிசி தகவல் கூறியுள்ளது. அதுமட்டுமின்றி இந்த முறை டி-20 உலகக்கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளனர்.

அதனால் அனைத்து அணிகளும் தீவிரமான ஆலசோனையில் உள்ளனர். கடந்த ஆண்டு இறுதியில் நடந்த டி-20 உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா அணி கோப்பையை வென்றுள்ளனர். அந்த நேரத்தில் இந்திய அணி மிகவும் மோசமான நிலையில் லீக் சுற்றில் இருந்தே வெளியேறினார்கள்.

இந்த முறை எப்படியாவது வெற்றிபெற வேண்டுமென்று அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது இந்திய. உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்க போகும் நாடுகள் அணிகளை அறிவிக்க தொடங்கிவிட்டனர். அதில் டி-20 உலகக்கோப்பை போட்டிகள் பங்கேற்க போகும் 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது இங்கிலாந்து அணி.

இங்கிலாந்து அணியின் விவரம் :

ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயின் அலி, பரிஸ்டோவ், ஹரி புரூக், சாம் கரன், கிறிஸ் ஜோர்டான், லிவிங்ஸ்டன், டேவிட் மலன், ஆடில் ரஷீத், பில் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லே, டேவிட் வில்லே, கிறிஸ் ஒக்ஸ் மற்றும் மார்க் வுட் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஆனால் முக்கியமான வீரரான ஜோப்ரா ஆர்ச்சர் இல்லாதது அதிர்ச்சியாக இருக்கிறது. கடந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்க முடியாமல் போனது. அதில் இருந்து காயத்தில் தவித்து வருகிறார் ஆர்ச்சர், அதனால் இந்த ஆண்டு டி-20 உலகக்கோப்பை 2022 போட்டிகளில் விளையாட போவதில்லை என்று இங்கிலாந்து அணி உறுதியாக கூறியுள்ளது.

இதற்கிடையில், இங்கிலாந்து அணியின் தொடக்க வீரரான பரிஸ்டோவ் உலகக்கோப்பை 2022 அணியில் தேர்வாகிருந்தார். ஆனால் தீடீரென்று காயம் ஏற்பட்ட காரணத்தால் அவரால் சரியாக விளையாட முடியாமல் போனது. அதனால் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் பரிஸ்டோவ் இல்லை என்று நேற்று தகவல் வெளியானது.

ஆனால் காயம் பெரிய அளவில் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த உலகக்கோப்பை போட்டிக்கான இங்கிலாந்து அணியில் அவரால் விளையாட முடியாத காரணத்தால் வெளியேற்றப்பட்டார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இது நிச்சியமாக இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.