விராட்கோலி இப்படி செய்வார் என்று சத்தியமாக நான் எதிர்பார்க்கவே இல்லை ; எனக்கே அதிர்ச்சியாக தான் இருக்கிறது ; சூரியகுமார் யாதவ் ஓபன் டாக் ;

0

ஆசிய கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த போட்டிகளில் இந்திய, ஆப்கானிஸ்தான், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் சூப்பர் 4 லீக் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். அதனால் சிறப்பாக போட்டிகள் இனி தான் தொடங்க உள்ளன.

ஐசிசி போன்ற முக்கியமான போட்டிகளில் இந்திய அணியின் ஆட்டம் சொதப்பலாகவே தான் இருக்கும். ஆனால் இப்பொழுது இந்திய கிரிக்கெட் அணி சற்று நம்பிக்கையுடன் போட்டிகளில் விளையாடி வருகின்றனர். அதுமட்டுமின்றி ஆசிய கோப்பை போட்டிகளில் நடைபெற்ற முதல் லீக் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி இரு போட்டிகளில் வென்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

அதிலும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் ஹர்டிக் பாண்டியாவின் பங்களிப்பு முக்கியமான காரணமாக இருந்தது. பின்பு ஹாங் காங் அணிக்கு எதிரான போட்டியில் சூரியகுமார் யாதவின் தீரில் ஆட்டம் வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்தது. அதுமட்டுமின்றி, ஹாங் காங் அணிக்கு எதிரான போட்டியில் சூரியகுமார் யாதவ் மற்றும் விராட்கோலி இருவரும் விளையாடி 98 ரன்களை பார்ட்னெர்ஷிப் செய்து விளையாடி உள்ளனர்.

அந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளனர். எப்படி பட்ட பந்தாக இருந்தாலும் அதனை சுழற்றி சுழற்றி அடித்து ரன்களை விளாசினார் சூரியகுமார் யாதவ். அதில் வெறும் 26 பந்தில் 68 ரன்களை விளாசியுள்ளார். அதில் 6 சிக்ஸர் மற்றும் 6 பவுண்டரிகள் அடங்கும்.

முதல் இன்னிங்ஸ் பேட்டிங் செய்துவிட்டு சூரியகுமார் யாதவ் மற்றும் விராட்கோலி பிட்ச்-ல் இருந்து வெளியேறினார்கள். அப்பொழுது சூரியகுமார் யாதவை பார்த்து விராட்கோலி தலை வணங்கினார். இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முக்கியமான பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் கூறுகையில் ;

“விராட்கோலி என்னை பார்த்து தலை வணங்கியது எனக்கு மிகவும் சந்தோசமாக உள்ளது. ஏனென்றால் அப்படிப்பட்ட ஒரு வீரர் என்னை பார்த்து அப்படி செய்தது மகிழ்ச்சி தான். அதுமட்டுமின்றி, என்னை முன்னே அனுப்பி அவர் பின்னால் வந்தார். பின்பு நான் தான் இருவரும் ஒன்றாக போகலாம் என்று கூறினேன். உண்மையிலும் என்னை விட அனுபவம் வாய்ந்த வீரர் தான் என்று கூறியுள்ளார் சூரியகுமார் யாதவ்.”

விராட்கோலி மற்றும் சூரியகுமார் யாதவின் காம்போ சிறப்பாக இருக்கிறது. இனிவரும் போட்டிகளில் இதுபோன்ற பார்ட்னெர்ஷிப் அமைந்தால் நிச்சியமாக இந்திய கிரிக்கெட் எந்தவிதமான சூழ்நிலையில் இருந்தாலும் வெற்றியை சுலபமாக பெற்றுவிடும் என்பதில் சந்தேகமில்லை…!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here