டி-20 உலகக்கோப்பை போட்டிகளில் இருந்து வெளியேறிய இந்திய அணியின் ஆல் – ரவுண்டர் ; அதிர்ச்சியில் ரசிகர்கள் ;

ஆசிய கோப்பைக்கான போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த லீக் போட்டிகளில் இந்திய, ஆப்கானிஸ்தான், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் சூப்பர் 4 லீக் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். அதனால் இனிவரும் போட்டிகள் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த ஆண்டு இறுதியில் டி-20 உலகக்கோப்பை 2022 போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. அதனால் உலக கிரிக்கெட் அணிகள் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர். சமீபத்தில் தான் உலககோப்பைப போட்டிக்கான வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் அணி.

ஆனால் இந்திய கிரிக்கெட் அணி இன்னும் அறிவிக்காத நிலையில் 15 பேர் கொண்ட இந்திய அணியில் யார் யார் இடம்பெறுவார்கள் என்று பல எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. ஆசிய கோப்பை போட்டிகளில் விளையாடி வரும் வீரர்களில் பலர் உலகக்கோப்பை டி-20 போட்டிகளிலும் விளையாட அதிக வாய்ப்புகள் உள்ளன.

ஆனால் இந்திய அணியின் ஆல் – ரவுண்டர் சமீபத்தில் தான் ஆசிய கோப்பை போட்டிகளில் இருந்து காயம் காரணமாக வெளியேறியுள்ளார். அதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஏனென்றால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ரவீந்திர ஜடேஜாவின் பங்களிப்பு இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக இருந்தது.

அதனால் இனிவரும் போட்டிகளில் அவருக்கு பதிலாக அக்சர் பட்டேல் இடம்பெற போகிறார். சமீபத்தில் வெளியான தகவலின் படி உலகக்கோப்பை போட்டிகளிலும் ரவீந்திர ஜடேஜாவால் விளையாட வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளனர். ஏனென்றால் அவருக்கு காயம் பெரிய அளவில் ஏற்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.

அதில் இருந்து குணமடைந்து வர அதிக நாட்கள் ஆகும் என்று தகவல் வெளியாக்கியுள்ளது. ஆல் – ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இந்திய அணியில் இடம்பெறவில்லை என்றால் நிச்சியமாக இந்திய அணிக்கு பின்னடைவு தான். அவருக்கு பதிலாக யார் இந்திய அணியில் இடம்பெற போகிறார் ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இன்று இரவு நடைபெற உள்ள ஆசிய கோப்பை போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோத உள்ளனர். இன்றைய போட்டியில் பழிதீர்த்து கொள்ளுமா இந்திய கிரிக்கெட் அணி ??