நேற்று நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டி இந்தியாவில் உள்ள அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பௌலிங் தேர்வு செய்தது.
முதலில் களம் இறங்கிய இந்தியா வீரர்கள் ஒரு சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஏனென்றால் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களம் இறங்கிய தவான் 4 ரன்கள் மற்றும் கே.எல். ராகுல் வெறும்1 ரன்களில் ஆட்டத்தை இழந்தனர். அதனால் ஒரு நல்ல தொடக்க ஆட்டத்தை இந்தியா வீரர்களால் தர முடியவில்லை.
அதன்பின்னர் பேட்டிங் செய்த இந்தியா அணியின் கேப்டன் விராட் கோலி டக் அவுட் ஆகிவிட்டார். அதன்பின்னர் களம் இறங்கிய பண்ட் 21 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தார். இந்தியா அணி 100 ரன்களுக்குள் முடிந்து விடும் என்று நினைத்து கொண்டு இருந்த போது ஸ்ரேயாஸ் ஐயர் 67 ரன்களை எடுத்து இந்தியா அணியின் மானத்தை காப்பாற்றினார்.
Read More : ஐபிஎல் 2021: இந்த ஐவரில் ஒருவர் தான் ஆரஞ்சு கேப் வாங்க அதிகம் வாய்ப்பு இருக்கிறது… ; யார் அந்த இவர்?
ஆனால் 20 ஓவர் முடிவில் 124 ரன்களை எடுத்து 7 விக்கெட்டை இழந்துள்ளனர். அதன்பின்னர் களம் இறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் ஜேசன் ராய் 49 ரன்களையும் ஜோஸ் பட்லர் 28 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தனர். அதன் பின்னர் களம் இறங்கிய மலன், பாரிஸ்டாவ் ஆட்டம் இழக்காமல் 15.3 ஓவரில் 130 ரன்களை எடுத்து முதல் டி-20 போட்டியில் இந்தியாவை வென்றது இங்கிலாந்து அணி.
இந்த அணி டி-20 உலகக்கோப்பை வெல்ல அதிகம் வாய்ப்பு இருக்கிறது ; விராட் கோலி ஓபன் டாக்
முதல் டி-20 போட்டி முடிந்த பிறகு அளித்த பேட்டியில் , இங்கிலாந்து அணி வருகின்ற டி-20 போட்டிகளில் வெல்ல அதிகம் வாய்ப்பு உள்ளதாக இந்தியா அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். வருகின்ற 2வது டி-20 போட்டியில் இங்கிலாந்து அணியை விழ்த்துமா ?? என்று பொறுத்து தான் பார்க்க வேண்டும் .