ஐபிஎல் 2021: இந்த ஆண்டு 2021, ஏப்ரல் 8 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் ரசிகர்கள் மிகவும் பல எதிர்பார்ப்புகளுடன் இருக்கின்றனர். அதுவும் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற போவதால் உட்ச்சகத்துக்கு எந்த பஞ்சமும் இல்லை என்று சொல்லலாம்.


கடந்த ஆண்டு ஐபிஎல் 2020 போட்டியில் அதிக ரன்களை எடுத்து முதல் இடத்தில் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல். ராகுல் உள்ளார். அதேபோல இந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டியில் யார் அந்த இடத்திற்கு வர அதிக வாய்ப்பு உள்ளது என்று பார்க்கலாம்.
விராட் கோலி :


கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் விராட் கோலி சுமார் 466 ரன்களை எடுத்துள்ளார். விராட் கோலி ஒரு அதிரடியான வீரர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதுவும் 9 போட்டிகளில் பேட்டிங் செய்த கோலி ஐந்து அரை சதங்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரிஷாப் பண்ட் :


டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் அதிரடி வீரர் மற்றும் விக்கெட் கீப்பர். கடந்த மூன்று ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளில் அதிகமான ரன்களை அடித்துவருகிறார். அதுமட்டுமின்றி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நல்ல ரங்களையும் எடுத்துள்ளார் ரிஷாப் பண்ட். அதனால் அவருக்கும் இந்த ஆண்டு ஐபிஎல் 2021 அதிக ரன்களை எடுக்கும் தீரன் இவரிடம் உள்ளது.
கே.எல்.ராகுல்


இவர் பஞ்சாப் அணியின் கேப்டன் மற்றும் இந்திய அணியின் சிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மேன். கடந்த ஆண்டு ஐக்கிய அரபு நாட்டில் நடந்த ஐபிஎல் 2020 போட்டிகளால் இவர்தான் அதிக ரன்களை அடித்துள்ளார். அதனால் இவருக்கு ஆரஞ்சு கேப் வழங்கப்பட்டுள்ளது. மிக சிறந்த அதிரடி வீரர்களில் இவரும் ஒருவர்.
தேவ்ட் படிக்கள் :


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் மற்றும் இளம் அதிரடி வீரராக திகழ்ந்து வருகிறது. கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டி மிகசிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஐக்கிய அரபு நாட்டில் நடந்த ஐபிஎல் 2020 போட்டியில் 15 போட்டியில் விளையாடி 473 ரன்களை எடுத்துள்ளார். அதில் அதிகபட்சமாக 74 ரன்களை எடுத்துள்ளார். அதில் 5 அரை சதம் அடுத்துள்ளார். அதனால் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற போகிற ஐபிஎல் 2021 போட்டியில் அதிகமாக ரன்களை அடிக்கும் வாய்ப்பு இவருக்கு அதிகம் உள்ளது.
டேவிட் வார்னர் :


ஆஸ்திரேலியா அணியின் வீரர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் ஆக இருக்கிறார். இவர் அதிரடியாக ஆடும் வீரர்களில் ஒருவர். கடந்த ஆண்டு ஐபிஎல் 2020 போட்டியில் அதிகமாக ரன்களை எடுத்த வீரர் பட்டியலில் இவர் 3வது இடத்தை பிடித்துள்ளார். அதுமட்டுமின்றி 16 போட்டிகளில் விளையாடி 548 ரன்களை எடுத்துள்ளார், அதில் 4அரை சதம் அடுத்துள்ளர். அதிபட்சமாக 88 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது ஆட்டம் எப்போதும் நல்ல ஒரு சுவாரஸ்யமான நிகழ்வாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதனால் இந்த ஆண்டு ஐபிஎல் 2021யில் ஆரஞ்சு கேப் வாங்குவார?? என்று பொருந்து இருந்து தான் பார்க்க வேண்டும்.